Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் அறிமுகமாக இருக்கும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160! அப்படி என்ன இருக்கு இந்த ஸ்கூட்டரில்?.. முழு தகவல்!
விரைவில் அறிமுகமாக இருக்கும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

இத்தாலி நாட்டைச் சார்ந்த பியாஜியோ நிறுவனம் அதன் பிரீமியம் ரக ஸ்கூட்டர்களை அப்ரில்லா பிராண்டில் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த நிறுவனம் விரைவில் மேக்ஸி ரக ஸ்கூட்டரான எஸ்எக்ஸ்ஆர் 160 எனும் புதுமுக மாடலை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இதனை முதன் முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே இன்னும் ஒரு சில நாட்களில் அது அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்திய ஸ்கூட்டர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. பைக்குகளில் இணையான சிசி திறனில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

இதுபோன்ற நாம் கவனிக்க வேண்டிய எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் முக்கிய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அப்ரில்லா ஸ்கூட்டர் விற்பனையாளர்கள் எஸ்எக்ஸஆர் 160 ஸ்கூட்டருக்கான புக்கிங்கைத் தொடங்கியிருக்கின்றனர். ரூ. 5000 முன்தொகையில் ஸ்கூட்டருக்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக இதற்கான புக்கிங் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் ஸ்கூட்டர் டெலிவரி வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் அவை டெலிவரி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசைன் மற்றும் வசதிகள்:
இதன் ஸ்டைலைப் பொறுத்தவரை நாம் கவலைப்படவே வேண்டியதில்லை. ஏனெனில் இது இத்தாலிய பொறியியல் திறனில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், அப்ரில்லாவின் பிற தயாரிப்புகளைப் போலேவ எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரும் கவர்ச்சிக்கு குறையின்றி காணப்படுகின்றது. அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் கவர்ச்சியமானது மட்டுமில்லைங்க பல்வேறு சிறப்பு வசதிகளையும் தாங்கியே களமிறங்க இருக்கின்றது.

புதிய ஸ்டைலான எல்இடி பகல்நேர மின் விளக்கு, பெரிய அடர் கருப்பு நிறம் கொண்ட விண்ட்ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் (இணைப்பு வசதிக் கொண்டது), யுஎஸ்பி சார்ஜர் மற்றும் இருக்கைக்கு அடியில் மின் விளக்கு உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றது.

எஞ்ஜின்:
அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் பிஎஸ் 6 தரத்திலான 160 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 3 வால்வ் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7600 ஆர்பிஎம்மில் 10.7 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 11.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

எப்போது எதிர்பார்க்கலாம்?
அப்ரில்லா எஸ்எக்ஸஆர்160 ஸ்கூட்டரின் அறிமுக தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த ஸ்கூட்டர் 2021 ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் என உறுதி வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.2 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்எக்ஸ்ஆர்160 பற்றிய முக்கிய தகவல்:
இந்த ஸ்கூட்டரில் பிரேக்கிங் வசதிக்ககா முன் பக்க வீலில் 220 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட இருக்கின்றது. ஸ்கூட்டரில் 12 இன்ச் அளவுள்ள வீல்களே இடம்பெற இருக்கின்றன. இதில் 120/70-12 அளவுள்ள டயர்கள் பொருத்தப்பட உள்ளது. இதன் வீல் 1,353 மிமீ ஆகும். மேலும், இதன் எரிபொருள் கொள்ளளவு 7 லிட்டர் ஆகும்.