புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்கின் பிஎஸ்6 எஞ்சின் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 தர எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ட்ரையம்ஃப் நிறுவனமும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

அந்த வகையில், தற்போது பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் புதிய போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்கை ட்ரையம்ஃப் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்கில் வழங்கப்படும் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 1,200சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் தற்போது பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 78 பிஎச்பி பவரையும், 107 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சீக்குயென்ஷியல் எலெக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தின் மூலமாக மாசு உமிழ்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மல்டி பிளேட் அசிஸ்ட் க்ளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

எஞ்சின் தவிர்த்து புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்கில் கருப்பு - நீல வண்ணக் கலவையிலான புதிய இரட்டை வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது மிகவும் வசீகரமாக வண்ணத் தேர்வாக இருக்கும். இதுதவிர்த்து, கருப்பு மற்றும் கருப்பு- சிவப்பு வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக வந்துள்ள இந்த புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக் 245.5 கிலோ எடை கொண்டது. முன்புறத்தில் வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், அகலமான டயர் உள்ளிட்டவற்றுடன் பிரம்மாண்டமாக இருக்கிறது.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

முன்சக்கரத்தில் பிரெம்போ 2 பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபர்கள் கொண்ட 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், ஸ்போக்ஸ் சக்கரமும் இடம்பெற்றுள்ளன. இரட்டை சைலென்சர்கள், சொகுசான பெரிய இருக்கை அமைப்பு ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

 புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக் ரூ.11.33 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய பிஎஸ்-4 மாடலின் விலையிலேயே புதிய பிஎஸ்6 மாடல் வந்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயம். ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடலுக்கு அடுத்து தற்போது இந்த போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்6 மாடலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர், ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்6 எஞ்சின் தேர்வு, ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்6 சிறப்பம்சங்கள்
Story first published: Monday, August 17, 2020, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X