புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள், விலை விபரம் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

டிசைனில் சிறிய மாறுதல்கள் மற்றும் பிஎஸ்6 எஞ்சினுடன் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் 2020 மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருந்தது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த பைக்கின் அறிமுகத்தை ட்ரையம்ஃப் நிறுவனம் தள்ளிப்போட்டது. இந்த சூழலில், அனைத்து வாகன நிறுவனங்களும் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் செய்திக் குறிப்பு வாயிலாக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

அந்த வகையில், ட்ரையம்ஃப் நிறுவனம் தனது புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடலை சமூக ஊடகம் வாயிலாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக் தாய்லாந்து நாட்டிலுள்ள ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஆர்எஸ் பைக் மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதன் ஊடாகவே பகல்நேர விளக்குகளும் கொடுக்கப்பட்டு புதிய முக வசீகரத்தை பெற்றிருக்கின்றன. இது மட்டுமின்றி, விண்ட் ஸ்க்ரீன், சைடு பேனல்கள் உள்ளிட்டவற்றில் சிறிய அளவிலான டிசைன் மாறுதல்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த பைக்கில் புதிய டிஎஃப்டி தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் மற்றும் கோ ப்ரோ கேமரா இணைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சமாக கூறலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கில் முக்கிய மாற்றமாக, பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 3 சிலிண்டர்கள் கொண்ட 765 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் வந்துள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய மாடலைவிட டார்க் திறன் 2 என்எம் அளவுக்கு கூடி இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த புதிய எஞ்சின் நடுத்தர நிலையில் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. அப்சைடு டவுன் குயிக் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

புதிய ட்ரையம்ஃப்ட் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கில் ஷோவா நிறுவனத்தின் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் நிறுவனத்தின் எஸ்டிஎக்ஸ்40 பிக்கிபேக் ரிசர்வாயர் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

MOST READ: பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

அதேபோன்று, இந்த பைக்கில் பிரெம்போ பிரேக் சிஸ்டம், சூப்பர்கார்ஸா எஸ்பி வி3 டயர்கள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், 4 விதமான டிரைவிங் மோடுகள் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. 166 கிலோ எடை கொண்டது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த பைக்கில் இரண்டு வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. முதலாவதாக சில்வர் மற்றும் மஞ்சள் பாடி டீக்கெல் அலங்காரத்துடன் கூடி மேட் ஜெட் பிளாக் என்ற வண்ணத் தேர்வும், இரண்டாவதாக சிவப்பு வண்ண பாடி டீக்கெல் ஸ்டிக்கர் கொண்ட அலுமினிய வண்ணத் தேர்விலும் கிடைக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடலானது ரூ.11.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 790 ட்யூக், டுகாட்டி மான்ஸ்ட்டர் 821, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் 750 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2020, 14:28 [IST]
English summary
British motorcycle manufacturer, Triumph Motorcycles has launched the updated Street Triple RS in India and priced at Rs. 11.13 Lakh (ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+