டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

வருகிற நவம்பர் 17ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் டீசர் படங்களை ட்ரையம்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது இதன் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

இது தொடர்பான பதிவில் பைக்கின் அறிமுகம் நவம்பர் 17ஆம் தேதி என்பது மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் புதிய டைகர் 850 பைக்கில் 888சிசி, இன்-லைன் 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள டைகர் 900 பைக்கில் வழங்கப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 94 பிஎச்பி மற்றும் 7,250 ஆர்பிஎம்-ல் 87 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களின் மூலம் ட்ரையம்ப் டைகர் 1050 பைக்கை போன்று புதிய டைகர் 850 அதிகளவில் லைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதுதான் டைகர் 900 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இந்த 850சிசி பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசமாகும்.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

ஏனெனில் 850 ஸ்போர்ட் பைக் முழுக்க சாலைக்கு ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளுடன் வேகமாக ஒற்றிணைந்த விடக்கூடிய டயர்கள், விண்ட்ஷீல்டு மற்றும் ஸ்போர்டியரான காற்றியக்கவியலுடன் இந்த ஸ்போர்ட் பைக்கை எதிர்பார்க்கலாம்.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

டைகர் 900 பைக்கிற்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ளதால் மெக்கானிக்கல் பாகங்கள் அனைத்தும் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கில் மலிவானதாகவே இருக்கும். இதன் காரணமாக இந்த 850சிசி பைக்கின் விலையினையும் அந்த 900சிசி பைக்கை காட்டிலும் மலிவானதாகவே நிர்ணயிக்கப்படும்.

டைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்!! விரைவில் அறிமுகமாகிறது

மற்றப்படி ஹேண்டில் பாரில் கோ-ப்ரோ கண்ட்ரோல்கள் மற்றும் மை ட்ரையம்ப் இணைப்பு சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கிய எலக்ட்ரானிக் தொகுப்புகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் அறிமுகம் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு பிறகு இந்த ட்ரையம்ப் டைகர் பைக்கிற்கு சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்ஆர் மற்றும் யமஹா ட்ராசர் 900 பைக்குகள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
New Triumph Tiger 850 Sport Teased. 17 November wil unveil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X