ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய பிஎஸ்6 இணக்கமான 2020 ஆர்டிஆர் 160 மாடலை ரூ.93,500 என்கிற ஆரம்ப விலையுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த பைக்கிற்கான முன்பதிவுகளும் அனைத்து டிவிஎஸ் டீலர்ஷிப்களிலும் துவங்கப்பட்டுள்ளன.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி என்கிற பெயரில் புதிய பிஎஸ்6 பைக் ஒன்று சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமானது. அந்த பைக்கில் 4 வால்வுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பிஏஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆர்டிஆர் 160 பைக்கில் 2 வால்வுகள் தான் இருக்கும். இதனால் இரு பைக்குகளையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

கடந்த 2006ல் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாச்சியின் பிரபலமான வரிசை மாடல் பைக்காக, தற்போது அறிமுகமாகியுள்ள ஆர்டிஆர் 160 பைக் தான் விளங்குகிறது. இந்த பைக் சந்தையில் பஜாஜ் பல்சர் 150 டிடிஎஸ்-ஐ போன்ற கடுமையான போட்டியினை அளிக்கக்கூடிய பைக்குடன் போட்டியிட்டு வருகிறது.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

டிவிஎஸ் நிறுவனத்தின் 'சுத்தமான' தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 2020 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக், புதிய கிராஃபிக்ஸ் மற்றும் எரிபொருள் திறனை பெற்றுள்ளது. இந்த அப்டேட்டிற்கு காரணம், இந்த பைக்கில் ஆர்டி-எஃப்ஐ தொழிற்நுட்பம் வழங்கப்பட்டிருப்பது தான்.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.93,500-ஐ ஆரம்ப விலையாக பெற்றுள்ள இந்த பைக்கின் ட்வின்-டிஸ்க் வேரியண்ட் அதிகப்பட்சமாக ரூ.96,500 வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. அப்பாச்சி 4 வால்வு மாடல்களுக்கு முன்னதாக ஜிடி (க்லைட் த்ரூ) தொழிற்நுட்பத்தை அதன் பிரிவில் பெற்ற முதல் பைக் ஆர்டிஆர் 160 2-வால்வு மாடல் தான்.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

இந்த தொழிற்நுட்பம், நகரப்புற சூழலில் சோர்வில்லாத பயணத்தை பைக் வழங்க உதவும். அதாவது கடும் போக்குவரத்து நெரிசலில் பைக் சிக்கிக்கொண்டாலும் எரிபொருள்-இன்ஜெக்‌ஷன் அமைப்பின் மூலம் வாகனங்களுக்கு இடையே எளிதாக நுழைந்து வர முடியும்.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

பிஎஸ்6 தரத்தில் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள 159.7சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 15.3 பிஎச்பி பவர் மற்றும் 13.9 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்டிஆர் 160 பிஎஸ்4 மாடலின் என்ஜின் 14.9 பிஎச்பி பவரையும் 13.03 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

பொதுவாக பைக், பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டால் அதன் என்ஜினின் வெளியிடும் ஆற்றல் அளவு குறையும். ஆனால் இந்த பைக்கில் எஃப்ஐ சிஸ்டம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால் என்ஜின் பைக்கிற்கு வழங்கும் அளவு அதிகரித்துள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அளவில் எந்த மாற்றமும் இல்லாமல், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் அப்படியே இந்த பிஎஸ்6 பைக்கிலும் தொடரவுள்ளது.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்த புதிய பிஎஸ்6 பைக்கை வழக்கமான அதே ரேசிங் லைன்-அப்பில் நிலை நிறுத்தும் என நம்பலாம். இந்தியாவில் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் நீண்ட கால அனுபவத்தை கொண்டுள்ள இந்நிறுவனம் வெளிநாடுகளில் பைக்குகளை விற்பனை செய்வதில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் நடைபெற்ற ஐகானிக் டக்கார் ரேலி.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பிஎஸ்6 மாடல் முத்து வெள்ளை, மேட் ப்ளூ, மேட் ரெட், பளபளப்பான கருமை, பளபளப்பான சிவப்பு மற்றும் டி க்ரே உள்ளிட்ட 6 நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் டி க்ரே-ஐ தவிர மற்ற அனைத்து நிற பெயர்களும் எளிதான மற்றும் தெரிந்த பெயர்களாக உள்ளன. வழக்கமாக டிவிஎஸ் நிறுவனம் தனது அனைத்து மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களுக்கும் சிக்கலான பெயரையே சூட்டும்.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

டிவிஎஸ் ஆர்டிஆர் 160 பைக்குடன் சந்தையில் நீண்ட வருடங்களாக பஜாஜ் பல்சர் 150 டிடிஎஸ்-ஐ பைக் மாடல் தான் விற்பனையில் மல்லுக்கட்டி வருகிறது. இந்திய சந்தையில் 150-160 சிசி மோட்டார்சைக்கிள் பிரிவு அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த 15 வருடத்தில் யமஹா எஃப்இசட்15 வி3.0, சுசுகி ஜிக்ஸெர் 150, ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் 150-ன் தற்போதைய தலைமுறை பைக் உள்ளிட்ட பிரபலமான பைக் மாடல்கள் அறிமுகமாகிவிட்டன.

ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன...

மற்றொரு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலுக்கு போட்டியாகவும் சந்தையில் பல பைக் மாடல்கள் உள்ளன. இந்த பைக் 2 வால்வு பைக்கை விட அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2020, 12:14 [IST]
English summary
TVS Rolls Out BS6-compliant TVS Apache RTR 160 2V
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+