டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

டிவிஎஸ் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்த தகவலை வீடியோ டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

நீண்டகால பல பரீட்சைகளுக்கு பின்னர் டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின் தயாரிப்பான க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.

அறிமுகத் தேதியை அறிந்துக்கொள்வதற்கு முன்னர் இந்த ஸ்கூட்டர் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை முன்னதாக பார்த்துவிடலாம்.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

க்ரியான் மின்சார ஸ்கூட்டர்தான் டிவிஎஸ் நிறுவனத்தின் மூலம் வெளிவரும் முதல் மின்சார வாகனம் ஆகும். இதுவே இந்த ஸ்கூட்டருக்கு தனி சிறப்பைச் சேர்த்துள்ளது. இந்த ஸ்கூட்டர் பல நாட்களாக தமிழகத்தின் பல்வேறு சாலைகளில் பல பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது வெளியாகிய ஸ்பை படங்கள் அதன் ரசிகர்கள் மத்தியில் ஒரு விதமான பூரிப்பை ஏற்படுத்தியது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

இதற்கு டிவிஎஸ் நிறுவனத்தின்மீது அவர்கள் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கையும், அந்நிறுவன தயாரிப்புகளின் தரமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு பிரிமியம் வசதிகள் கிடைக்கும் என உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. முன்னதாக கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் அடிப்படையில் இந்த தகவல்கள் பரவி வருகின்றது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

அந்தவகையில், அதிக ரேஞ்ச் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் க்ரியான் மின்சார ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், இந்த ஸ்கூட்டர் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியளிக்க இருக்கின்றது. குறிப்பாக, ஏத்தர் மற்றும் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டர்களுக்கு எதிராக டிவிஎஸ் நிறுவனம் க்ரியானை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

எனவே, இந்த மின்சார ஸ்கூட்டரில் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட, 80 முதல் 100 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்குகின்ற 4kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் டிவிஎஸ் தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், இது அறிமுகத்தின்போதே உறுதியாக தெரியவரும்.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

தொடர்ந்து, தொழில்நுட்ப வசதியாக ஜிபிஎஸ் (லைவ் டிராக்கிங் வசதி), செல்போன் சார்ஜிங் போர்ட், ப்ளூடுத் இணைப்பு, பார்க் அசிஸ்ட், ஆன்ட்டி தெஃப்ட் தொழில்நுட்பம், ரைடிங் மோட்கள் என எக்கச்சக்க அம்சங்கள் டிவிஎஸ் க்ரியான் மின்சார ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியிலேயே அறிமுகம் செய்துவிட்டது. இதுவே, இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம் முதல் முறை. இதைத்தொடர்ந்தே, விற்பனைக்கான அறிமுகத்திற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

இதனடிப்படையிலேயே க்ரியான் பற்றிய டீசர் இன்று (ஜனவரி 22) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சுவரில் நிறுவப்பட்ட சார்ஜிங் பாயிண்ட் மற்றும் மங்களாக்கப்பட்ட க்ரியான் ஸ்கூட்டரின் தோற்றம் காட்சிக்குள்ளாகியுள்ளது. இத்துடன் மிக முக்கியமாக, இந்த ஸ்கூட்டர் வருகின்ற 25ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

இது, நீண்ட காலமாக க்ரியான் வரவை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சற்றே விருந்தளித்ததைப் போன்று உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகின்றது.

குறிப்பாக, முகப்புத்தகம், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்று வருகின்றது.

View this post on Instagram

We're ready to Charge Life! Are you?

A post shared by TVS Motor Company (@tvsmotorcompany) on

தற்போது, வெளியாகியிருக்கும் இந்த டீசருக்கு முன்பாகவே க்ரியான் ஒரு முறை கேமிராவின் கண்களில் சிக்கியது. அப்போது, இந்த ஸ்கூட்டர் அதி வேகத்தில் பறந்துச் சென்றதால் அதில் இருக்கும் சிறப்பம்சங்களை சரிவர காண முடியவில்லை.

இருப்பினும், திடகாத்திடமான தேகத்தில் அது வடிவமைக்கப்பட்டிருப்பது உறுதியானது.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

மேலும், அந்த ஸ்கூட்டரின் அங்க அடையாளங்கள் ஸ்டிக்கர்கள் மூலம் மறைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில விஷயங்களை மட்டும் நம்மால் அறிய முடிந்தது.

அதில் ஒன்று க்ரியான் மின்சார ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இடம்பெறுவது உறுதியாகியது. இன்டெல் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கருவி பேட்டரி சார்ஜ், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்ட தகவல்களை திரை மூலமாக வழங்கும்.

டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..?

இத்துடன், முன்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், கால் வைப்பதற்கு ஏதுவான ஃபுட்போர்ட் என பிரிமியம் வசதிக்கும் குறைவின்றி க்ரியான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது வழக்கமான ஸ்கூட்டர் மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் வேறு சில முக்கிய தகவல்கள் ஸ்கூட்டரின் (ஜனவரி 25) அறிமுகத்தின்போதே வெளியிடப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2020, 20:04 [IST]
English summary
TVS Electric Scooter Creon Launch Date Revealed With Teaser. Read In Tamil.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+