கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்! வேதனையில் இருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்! என்ன தெரியுமா?

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்தவருக்கு வீடு தேடி அதிர்ஷ்டம் வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா (நாவல் கோவிட்-19) வைரஸ் தாக்கத்தின் அச்சத்தால் உரைந்து நிற்கின்றன. உலகளவில் இந்த வைரஸ் தொற்றின் காரணமாக 14,613 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இது, நேற்றைய நாளின் இறுதி வரை ஏற்பட்ட இழப்புகளின் புள்ளி விவரங்கள் ஆகும். இதுமட்டுமின்றி, இந்த வைரஸ் தொற்றின் அறிகுறி தற்போது 192-க்கும் அதிகமான நாடுகளில் பரவியிருக்கின்றது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

ஆகையால், எதிர்காலங்களில் பலி எண்ணிக்கை அதகரிக்கலாம் என்ற அச்சமான சூழலே அனைத்து நாடுகளிலும் நிலவுகுகின்றது. குறிப்பாக கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வைரஸ் தொற்றின் பரவும் விதம் இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தும்பல் மற்றும் இரும்பல்களின் மூலமாக வெளியேறும் கண்களுக்கே புலப்படாத நீர் குமிழ்களின் மூலம் பரவும் தன்மைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதனைக் கட்டுபடுத்துவது மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கின்றது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

மேலும், இந்த வைரஸ் சாதாரண காய்ச்சலைப் போன்று ஆரம்பத்தில் சலி மற்றும் இரும்பல் தொல்லை ஆகியவற்றை மட்டுமே தருகின்றது. ஆகையால், இதனைக் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் செயல்படும் நபர்களின்மூலம் மற்றவர்களுக்கு மிக எளிமையாக பரவிவிடுகின்றது. எனவே, இதன் பரவும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

எனவே, இந்த வைரஸ் பரவலுக்கு முற்று புள்ளி வைக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, மக்களை தனிமைப்படுத்துதல் நடவடிக்கையை தற்போது உலக நாடுகள் அனைத்தும் கையாள தொடங்கியிருக்கின்றன.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

அதேசமயம், இந்த வைரஸ்கான எதிர்வினை ஆற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. என்னதான் மாற்று மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வந்தாலும், அது முழுமையாக பயன்பாட்டுக்கு வர இன்னும் சில காலங்கள் ஆகும் என தகவல் தெரிவிக்கின்றன. எனவே, மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

இந்நிலையில், இந்திய அரசு தரப்பில் கொரோனோவை பரவலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏராளமாக செய்யப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், விற்பனை சந்தைகள் போன்றவற்றிற்கு மார்ச் 31ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சுற்றுலாத் தளங்களுக்கும் அரசு தடைவிதித்துள்ளது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

இதுமட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்தியாவில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏன், ஒரு சில மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே சுற்றுலா சென்ற சில நபர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

அந்தவகையில், முடக்கப்பட்ட பகுதியில் சிக்கிய ஓர் இளைஞர் தன்னை விலையுயர்ந்த பைக்கை இழந்து நிற்கின்றார். அந்த இளைஞரின் துயரை ஆழ்த்தும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் வேறொரு விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

இந்த சம்பவம் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. ஷகிர் சுபன், இந்த இளைஞர்தான் தற்போது டிவிஎஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த பைக்கை பரிசாக பெற்றிருக்கின்றார். இவர் பைக்கிலேயே உலகத்தைச் சுற்றிவரும் வாலிபனாக இருந்து வருகின்றார். தற்போது இவரின் சாகச பயணத்திற்கு கொரோனா தடையாய் வந்திருக்கின்றது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

ஷாகிர் சுபன் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது நெடுந்தூர பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஈரான், அசர்பைஜான் உள்ளிட்ட நாடுகளை அவர் கடந்துச் சென்றுள்ளார். அவர் பயணத்தைத் தொடர ஆரம்பித்தபோது கொரோனாவின் தாக்கம் பெரியளவில் உலகிற்கு தெரியவில்லை. ஆனால், ஷாகிர் ஈரானைக் கடந்து ஜார்ஜியா செல்லும்போது கொரோனாவின் தாக்கம் அதி-தீவிரமாக மாறியது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

ஆகையால், ஷாகீரால் சாகச பயணத்தின் அடுத்தகட்டத்தை எட்ட முடியவில்லை. மேலும், அவரை ஜார்ஜியா நாட்டின் எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்திய அந்நாட்டு அதிகாரிகள் அவரை திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து, அவரை தரை மார்க்கமாக செல்லவும் அனுமதிக்கவில்லை. ஆகையால், அந்த இளைஞரால் அவரது பைக்கை மீண்டும் அங்கிருந்து எடுத்துவர இயலாமல் அசர்பைஜான் நாட்டிலேயே தனித்து விடும் சூழல் ஏற்பட்டது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

இதையடுத்து, அவர் உலகம் சுற்ற பயன்படுத்திய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் அசர்பைஜான் நாட்டின் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு, துபாய் வழியாக இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஷாகிருக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் விதமாக, அவர் ஏற்கனவே பயன்படுத்தி வந்த அப்பாச்சி 200 4வி பைக்கைக் காட்டிலும் பல மடங்கு அதி-திறனுடைய அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அது பரிசாக வழங்க எண்ணியது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

அதை தற்போது வழங்கியும் உள்ளது. ஆகையால், ஷாகிர் டிவிஎஸ் வழங்கிய புதிய பைக்கில்தான் வலம் வந்தவாறு இருக்கின்றார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர், அவரது யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷாகிர் இதுபோன்று பைக்கிலேயே உலக நாடுகளைச் சுற்றி வருவது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக பல முறை இதுபோன்ற சாகச பயணங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

இதனாலயே சற்று பிரபலமானவராக அவர் இருக்கின்றார். மேலும், அவருக்கு நேர்ந்த இந்த சம்பவம் உடனடியாக டிவிஎஸ் நிறுவனத்திற்கு சென்று சேர்வதற்கு, யுடியூப்-இல் அவர் பிரபலமானவர் என்பதும் ஓர் காரணமாக இருக்கின்றது.

தற்போது டிவிஎஸ் நிறுவனம் வழங்கியிருக்கும் பைக்கினை அந்நிறுவனம், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

ஆகையால், இதன் ஸ்டைல் மற்றும் சக்தி வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. பரிசாக வழங்கப்பட்ட பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.4 லட்டசத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

கொரோனாவால் விலையுயர்ந்த பைக்கை இழந்த இளைஞர்.. வேதனையில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா!

இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதிக தொழில்நுட்ப வசதியே இத்தகைய அதீத விலைக்கு காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, இதன் டிஎஃப்டி முழு வண்ணத்திரை தொழிற்நுட்பங்களை விரல் நுனிக்கு வாரி வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் 313சிசி திறனுடைய சிங்கில் சிலிண்டர் எஞ்ஜினைப் பொருத்தியிருக்கின்றது.

அது லிக்யூடு கூல்டு எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி திறனையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது. இந்த பைக்கின் நேக்கட் வெர்ஷன் மாடலாகவே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி310 ஆர் பைக் உள்ளது. இது ஜெர்மன் பிராண்டான பிஎம்டபிள்யூவிடம் இருந்து கிடைக்கும் என்ட்ரீ லெவல் பைக்காகும்.

Source: Mallu Traveler/YouTube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TVS Motors Gifts Apache RR310 Who Loses Bike Due To Corona. Read In Tamil.
Story first published: Monday, March 23, 2020, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X