ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் என்டார்க் ஸ்கூட்டரின் பிஎஸ்6 வெர்சனை டிவிஎஸ் நிறுவனம் சந்தையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.65,975 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

இந்த விலை தற்சமயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் என்டார்க் பிஎஸ்4 ஸ்கூட்டர் மாடலை விட ரூ.6,513 அதிகமாகும். டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்4 ஸ்கூட்டரின் விலை ரூ.59,462 ஆக உள்ளது. பிஎஸ்6 என்டார்க் ஸ்கூட்டரின் ரேஸ் எடிசன் அதிகப்பட்சமாக ரூ.72,455 வரையில் விலையை பெற்றுள்ளது.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

விலை அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து எந்த தகவலையும் டிவிஎஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் தற்போதைய மாடலின் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலை விட சிறிது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எரிபொருள் திறனை இந்த பிஎஸ்6 ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

என்டார்க் ஸ்கூட்டரின் இப்போதைய பிஎஸ்4 124.79சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 9.4 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10.5 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கி வருகிறது.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

பிஎஸ்6 அப்டேட்டாக என்ஜின் அமைப்பில் கார்புரேட்டட் சிஸ்டத்திற்கு பதிலாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை டிவிஎஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது. இதேபோல் ஸ்கூட்டரின் எக்ஸாஸ்ட் அமைப்பும் புதிய வெர்சனிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

இவற்றுடன் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸோன்னெக்டட் ப்ளூடூத் சிஸ்டம் என்ற ப்ளூடூத் மூலம் செயல்படக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் புதிய பிஎஸ்6 என்டார்க் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலின் மூலம் நாவிகேஷன் அசிஸ்ட் வசதி, கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடத்தின் லொக்கேஷனை காட்டும் வசதி, ஸ்மார்ட்போன் அழைப்பு மற்றும் மிஸ்டு காலை அலார்ட் செய்யும் சிஸ்டம், ஆட்டோ ரிப்ளே எஸ்எம்எஸ், போன் சிக்னல் & போன் பேட்டரியின் சதவீதம் மற்றும் பயணத்திற்கான விபரங்கள் உள்ளிட்டவற்றை ஓட்டுனர் பெற முடியும்.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

இந்த வசதிகளுடன் அதிகப்பட்சமாக 60 km/h வேகம் வரை காட்டும் வேகமானி, லேப் நேரமானி மற்றும் பவர்/ஈக்கோ மோட்களை சுட்டி காட்டும் சிஸ்டம் போன்றவையும் இந்த புதிய இண்ட்ரூமெண்ட் கன்சோலில் உள்ளது.

ரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...!

இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலை தொடர்ந்து அடுத்த வருடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து ப்ரீமியம் தரத்தில் புதிய பைக் ஒன்று சந்தையில் இறக்குமதியாகவுள்ளது. ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையை பெறவுள்ள இந்த புதிய ப்ரீமியம் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2020, 13:50 [IST]
English summary
BS-VI TVS NTorq launched in India, priced from INR 65,975
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+