டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஸ்டார் சிட்டி+ பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.62,034 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 பைக் மார்க்கெட்டில் மோனோடோன் மற்றும் ட்யூல்-டோன் என்ற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரு வேரியண்ட்களும் பைக்கின் பெயிண்ட் அமைப்பை பொறுத்து தான் வேறுப்படுத்தப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

இதில் ட்யூல்-டோன் வேரியண்ட், மோனோடோன் வேரியண்ட்டை விட ரூ.500 விலை அதிகமாக பெற்றுள்ளது. மேலும் இந்த பிஎஸ்6 வேரியண்ட்கள் பிஎஸ்4 பைக்கை விட 7,600 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்படவுள்ளன.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

பிஎஸ்6 மாற்றத்தால் ஸ்டார் சிட்டி+ பைக், புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ், வித்தியாசமான மற்றும் அப்டேட்டான டிசைனில் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இவை மட்டுமின்றி செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி மொபைல் சார்ஜர், 5 முறைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை நிறங்களில் இருக்கை அமைப்பு போன்ற்வற்றையும் இந்த பிஎஸ்6 பைக் கொண்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

பிஎஸ்6 தரத்தில் அதே 109சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தான் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த என்ஜின் சிறிது அதிகமாக ஆற்றலை வெளிப்படுத்தவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி பவரையும் 8.7 என்எம் டார்க் திறனையும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பைக்கிற்கு வழங்கவுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

ப்ரேக்கிங் பணியை அதே ட்ரம் ப்ரேக்குகள் தான் தொடரவுள்ளன. இவற்றின் அளவு முறையே 130மிமீ மற்றும் 110மிமீ ஆகும். ப்ரேக்குகளுக்கு உறுத்துணையாக கோம்பி-ப்ரேக்கிங் தொழிற்நுட்பம் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஸ்டார் சிட்டி+ மூலமாக ஈக்கோ-த்ரஸ்ட் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் (ETFi) தொழிற்நுட்பத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பம் பைக்கின் எரிபொருள் திறனை கூடுதலாக 15 சதவீதம் அதிகரிக்கும். இதுமட்டுமில்லாமல் பைக்கின் ஒட்டுமொத்த பாகங்களின் செயல்பாட்டையும் மெறுக்கேற்றும்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

எரிபொருள் டேங்கின் கொள்ளளவில் எந்த மாற்றமும் இல்லை. அதே 10 லிட்டர் டேங்க் தான் தொடருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து கடைசியாக ஸ்டார் சிட்டி+ மாடலின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகமாகி இருந்தது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

அதன்பின் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தான் அறிமுகமாகக்கூடும் என அனைவரும் நினைத்திருந்த நிலையில் தற்போது இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.62,034

அன்றாட போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற வாகனமாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக் உள்ளது. கடந்த ஆண்டில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் தற்போது பிஎஸ்6 தரத்தை பெற்றுள்ளது. மேலும், சந்தையில் இந்த பைக் பஜாஜ் ப்ளாடினா 110 மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் போன்ற பைக்குகளுடன் விற்பனை போட்டியை தொடரவுள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Star City+ BS6 Commuter Motorcycle Launched In India: Prices Start At Rs 62,034
Story first published: Saturday, January 25, 2020, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X