டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

வரும் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. பிஎஸ்4 விதிகளை நீட்டிப்பு செய்து தருவதற்கான காலக்கெடு நீடிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதால், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்6 வாகனங்களை களமிறக்கி வருகின்றன.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த வகையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடலானது மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட், ஸ்பெஷல் எடிசன் மற்றும் கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த புதிய மாடலில் 99.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 4.4 எச்பி பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

பிஎஸ்4 மாடலுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த எக்ஸ்எல்100 மொபட்டின் எரிபொருள் சிக்கனம் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமையும்.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

பிஎஸ்4 மாடலானது 84 கிலோ எடைகொண்டதாக இருந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாடலானது ஒரு கிலோ எடை அதிகரித்து 85 கிலோவாக உள்ளது.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

டிவிஎஸ் எக்ஸ்எல்100 பிஎஸ்6 மொபட்டின் ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட் மாடலுக்கு ரூ.43,889 விலையும், கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் மாடலுக்கு ரூ.45,459 விலையும், ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.45,129 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது!

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனம் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு குறைவான பட்ஜெட்டில் பல் பயன்பாட்டு வகை இருசக்கர வாகனமாகவும் இது இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிக மைலேஜ் தரும் வகையில் பிஎஸ்6 மாடல் வந்திருப்பது கூடுதல் மதிப்பை தரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 21, 2020, 16:11 [IST]
English summary
TVS Motor Company has launched the BS6 XL100 moped in India and prices starting at Rs. 43,889 (Ex-Showroom).
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+