டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் அதே கொரோனா அச்சம் காரணமாக மக்கள் தற்போது ஆட்டோ, டாக்ஸி, பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை தவிர்க்க தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

அத்துடன் பண்டிகை காலமும் தற்போது சூடுபிடித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில், இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. கடந்த மாதம் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ஹீரோ மோட்டோகார்ப் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் கடந்த மாதம் 7,32,498 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,52,672 ஆக மட்டுமே இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1,79,826 இரு சக்கர வாகனங்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 32.54 சதவீத வளர்ச்சியாகும். இரண்டாவது இடத்தை ஹோண்டா பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 4,94,459 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 4,87,819 ஆக இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

அதாவது ஹோண்டா நிறுவனம் 6,640 இரு சக்கர வாகனங்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 1.36 சதவீத வளர்ச்சியாகும். மூன்றாவது இடத்தை டிவிஎஸ் பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 3,01,380 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 2,52,684 ஆக மட்டுமே இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனம் 48,696 இரு சக்கர வாகனங்களை அதிகமாக விற்பனை செய்துள்ள நிலையில், 19.27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நான்காவது இடத்தை பஜாஜ் பிடித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 2,68,631 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 2,42,516 ஆக மட்டுமே இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

26,115 இரு சக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ள நிலையில், பஜாஜ் நிறுவனம் 10.77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஐந்தாவது இடத்தை சுஸுகி நிறுவனம் பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் சுஸுகி நிறுவனம் 67,225 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 66,215 ஆக இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

சுஸுகி நிறுவனம் 1,010 இரு சக்கர வாகனங்களை அதிகமாக விற்பனை செய்துள்ள நிலையில், 1.53 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆறாவது இடத்தை ராயல் என்பீல்டு பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் ராயல் என்பீல்டு நிறுவனம் 66,891 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்தாண்டு அக்டோபரில் 71,964 ஆக இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

5,073 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 7.05 சதவீத வீழ்ச்சியை ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது. 7வது இடத்தை யமஹா நிறுவனம் பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் யமஹா நிறுவனம் 60,176 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 46,082 ஆக மட்டுமே இருந்தது.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

14,094 இரு சக்கர வாகனங்களை யமஹா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ள நிலையில், 30.58 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடந்த அக்டோபர் மாதம் 19,91,260 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 17,19,952 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

டூவீலர் சேல்ஸ் ரிப்போர்ட் அக்டோபர் 2020: முதல் இடத்தை பிடித்த நிறுவனம் எதுன்னு தெரியுமா?

2,71,308 இரு சக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 15.77 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை எதிரொலியால் நடப்பு நவம்பர் மாதத்திலும் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

Most Read Articles

English summary
Two-Wheeler Sales Report - October 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X