பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை கருத்தில்கொண்டு, பைக், ஸ்கூட்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

கொரோனா பிரச்னையால் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த பெரும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், மத்திய, மாநில அரசுகளும் வரிச் சலுகைகளை ழங்குவதற்கும் அவை வலியுறுத்தி வருகின்றன.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்த நிலையில், வர்த்தகத்தை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இந்திய தொழிற்துறை கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்மலா சீத்தாராமன்," இருசக்கர வாகனங்களை சொகுசுப் பொருளாக கருத முடியாது. அது அத்தியாவசியம் இல்லை என்றும் கூற முடியாது," என்று தெரிவித்தார்.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

எனவே, வாகன நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

எனினும், ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது ஜிஎஸ்டி கவுன்சில் அதிகார வரம்பில் உள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான பரிந்துரைக்களுக்கான கமிட்டி, இதனை ஆராய்ந்து அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்த சூழலில், நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ள கருத்து, இருசக்கர வாகனங்கள் மீதான வரி குறைப்பு முடிவை சூசகமாக தெரிவிப்பதாகவே கருதப்படுகிறது.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

கொரோனாவால் பெரும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு சந்தித்து வருகிறது. வரி வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனினும், இருசக்கர வாகனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டால், அது நிச்சயம் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்.

 பைக், ஸ்கூட்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

குறிப்பாக, வரும் பண்டிகை காலத்தில் புதிய பைக், ஸ்கூட்டர் வாங்குவோருக்கு பலன் தரும் வகையில் அமையும். தற்போது பைக், ஸ்கூட்டர் வாகனங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு நாளை நடைபெற இருக்கும் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்திற்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
According to reports, Union Govt is planning to reduce GST Rate on two-wheelers soon.
Story first published: Wednesday, August 26, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X