அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

2021 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக்குகளை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பாக இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் விரைவில் தனது அட்வென்ச்சர் பைக் வரிசையை புதிய 2021 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர் மற்றும் சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மாடல்களுடன் அப்டேட் செய்யவுள்ளது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

இந்த நிலையில் மோட்டார்சைக்கிள்.காம் என்ற இணையத்தளத்தின் மூலம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களில் 2021ஆம் ஆண்டிற்கான கேடிஎம்-இன் இந்த இரு 1290சிசி அட்வென்ச்சர் பைக்குகளும் ரேடார் சார்ந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்று வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

இந்த தொழிற்நுட்பம் கேடிஎம் 1290 சூப்பர் பைக்குகளின் போட்டி பைக் மாடல்களான டுகாட்டி மற்றும் பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு சர்வ சாதாரணமாக வழங்கப்படுவது ஆகும். இது தவிர்த்து பைக்குகளின் தோற்றமும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

இதன்படி கேடிஎம் 790/890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களில் பார்த்ததை போன்று மிகவும் தாழ்வாக சென்றுமுடியும் பெட்ரோல் டேங்க் 2021 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக்குகளுக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுனர் இருக்கையும் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

இவற்றுடன் அப்டேட் லிஸ்ட் நின்றுவிடவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர் வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் ட்யுப்லெஸ் டயரை பெறவுள்ளது. ஆனால் எஸ் வேரியண்ட் வழக்கம்போல் அலாய் சக்கரங்களையே தொடரவுள்ளது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு மாற்றப்படவில்லை என்றாலும், அதன் மூடியை எலக்ட்ரிக் மூலமாக திறக்கக்கூடிய வசதி கொண்டுவரப்படவுள்ளது. ஹேண்டில்பாருக்கு கீழே மொபைல் போனை வைக்க போதுமான இடத்துடன் போனை சார்ஜ் செய்ய யுஎஸ்பி துளை வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார்சைக்கிள்.காம் இணையத்தளம் கூறுகிறது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

இயந்திர பாகங்களை பொறுத்தவரையில், இரு கேட்டலிக் கன்வெர்டர்கள், திருத்தியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் இரட்டை ரேடியேட்டர் லேஅவுட்டை 2021 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக்குகள் பெறவுள்ளன. இவற்றில் வழங்கப்படவுள்ள வி-ட்வின், லிக்யூடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 158 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

ப்ரெம்போ ப்ரேக்குகள் மற்றும் துணை-ஆக்டிவ் சஸ்பென்ஷன் செட்அப் அப்படியே இவற்றின் 2020 மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த இரு பைக்குகளில் வழங்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளில் டயரின் அழுத்தத்தை அளவிடும் மானிடரிங் சிஸ்டம், ஏபிஎஸ், உணர்வுதிறன்மிக்க ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

அட்வென்ச்சர் பைக்குகளுக்கு எல்லாம் இதுதான் அரசன் போல!! கேடிஎம் நிறுவனத்தின் 1290சிசி சூப்பர் அட்வென்ச்சர்...

இந்த 2021 மாடல்கள் புதிய 7-இன்ச் டிஎஃப்டி வண்ண திரையை அவற்றின் 2020 யூனிட்களுக்கு மாற்றாக பெறவுள்ளன. நமக்கு கிடைத்துள்ள இந்த தகவல்கள் குறைவுதான், முழுமையான விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட கேடிஎம் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்தியாவில் இந்த 1290சிசி கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள் விற்பனைக்குவர தற்போதைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2021 KTM 1290 Super Adventure details leaked
Story first published: Tuesday, December 29, 2020, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X