வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

கவர்ச்சிகர வண்ணத் தேர்வுகளில் வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிறப்பு பதிப்பு வெஸ்பா ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் மிகவும் பிரிமீயமான தேர்வுகளாக வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளன. பாரம்பரியம் மிக்க வெஸ்பா ஸ்கூட்டர்களின் தனித்துவமான டிசைன் அம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தனித்துவத்தையும், மதிப்பையும் வழங்கும் வித்ததில் அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெஸ்பா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெஸ்பா ரேஸிங் எடிசன் என்ற இரண்டு சிறப்பு பதிப்பு மாடல்களை வெஸ்பா அறிமுகம் செய்துள்ளது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

வெஸ்பா எஸ்எக்ஸ்எல்125 மற்றும் எஸ்எக்ஸ்எல்150 ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களிலும் இந்த ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 125சிசி மாடலுக்கு ரூ.1.20 லட்சமும், 150சிசி ரேஸிங் எடிசனுக்கு ரூ.1.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த 1960களில் ஜென்டில்மேன் ரைடர் என்ற மோட்டார் பந்தயங்களில் பங்கேற்றதை நினைவுகூறும் வகையில், இந்த வெஸ்பா ரேஸிங் எடிசன் வெளியிடப்பட்டு இருக்கிறது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இதற்கு தக்கவாறு, இந்த ஸ்கூட்டர்கள் வெள்ளை வண்ண ஸ்கூட்டரில் சிவப்பு வண்ண பட்டை கோடுகளுடன் கூடிய ரேஸ் ஸ்கூட்டர் போன்ற தனித்துவமான வண்ணக் கலவையில் வெளிவந்துள்ளது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், எல்இடி ஹெட்லைட், பிரத்யேக ஒற்றை இருக்கை அமைப்பு, ரியர் வியூ மிரர், ஹெட்லைட் சுற்றிலும் கருப்பு வண்ண வளைய அலங்காரம் மற்றும் தங்க வண்ண பூச்சுடன் கூடிய அலாய் வீல்கள், சிறிய விண்ட்ஷீல்டு அமைப்பு ஆகியவை இந்த ஸ்கூட்டரின் வசீகரத்தை கூட்டுகிறது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

வெஸ்பா எஸ்எக்ஸ்எல்125 ரேஸிங் சிக்ஸ்டீஸ் மாடலில் இருக்கும் எஞ்சின் 10 பிஎச்பி பவரையும், 9.60 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 150சிசி ரேஸிங் சிக்ஸ்டீஸ் மாடலில் இருக்கும் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

முன்சக்கரத்தில் 200 மிமீ வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. முன்புறத்தில் 11 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் உள்ளது. அதேபோன்று, சிங்கிள் சைடு ஆர்ம் அமைப்புடைய முன்புற சஸ்பென்ஷன் உள்ளது.

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.1,000 முன்பணம் செலுத்தி ஆன்லைன் மூலமாக இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள் ரூ.2,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. சாதாரண எஸ்எக்ஸ்எல்125 மாடலைவிட சிக்ஸ்டீஸ் மாடல் ரூ.7,000 கூடுதல் விலையிலும், எஸ்எக்ஸ்எள்150 மாடல் ரூ.5,000 கூடுதல் விலையிலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Vespa has launched Racing Sixties limited edition scooter models in India. Here are the complete details in Tamil.
Story first published: Tuesday, September 1, 2020, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X