Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலையுயர்ந்த டிரையம்ப் பைக்கில் 50 ஆயிரம் கிமீ பூர்த்தி செய்த பிரபலம்... காரையே பயன்படுத்த மாட்டார் போலிருக்கே
வாகன உலகத்தைச் சேர்ந்த ஓர் பிரபலம் அவரது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தின் மூலம் 50 ஆயிரம் கிமீ தூரத்தைப் பூர்த்தி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டிரையம்ப் நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வந்த கஃபே ரேஸர் ரக பைக்குகளில் த்ரக்ஸ்டன் மாடல் பைக்கும் ஒன்று. இப்பைக்கைப் பயன்படுத்தியே ஓர் பிரபலம் சுமார் 50 ஆயிரம் கிமீ பயணத்தை நிறைவு செய்திருக்கின்றார். இந்த தகவல் இருசக்கர வாகன பிரியர்கள் மற்றும் அட்வென்சர் பயணத்தை மேற்கொள்ளுவோர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை எந்தவொரு சூப்பர் பைக் பிரியருமே எட்டாத ஓர் இலக்காகவே இது பார்க்கப்படுகின்றது. இதுபோன்று ஓர் தகவல் இதுவரை வெளிவராதநிலையிலேயே இதனை புதிய மைல்கள்ளாக அநேகர் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய சாதனயை சூப்பர் பைக்கில் செய்தவர் யார் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்புவதை எங்களால் அறிய முடிகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் குர்பர்தாப் போபராய், இவரே சூப்பர் பைக்கில் 50 ஆயிரம் கிமீ தூரத்தைக் கடந்தவர் ஆவார். பைக்கை வாங்கிய நாள் முதல் தற்போது வரை அவர் செய்த பயணத்தின் தூரம் இதுவாகும். இதுகுறித்த தகவலையே ட்ரையம்ப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.

டிரையம்ப் நிறுவனம் தனது பிரீமியம் தர பைக்குகளில் ஒன்றான போனேவில்லே மாடலைத் தழுவியே த்ரக்ஸ்டன் பைக்கை உருவாக்கியிருக்கின்றது. எனவே கவர்ச்சிக்கும், தொழில்நுட்ப வசதிகளுக்கும் எந்தவொரு குறைச்சலுமின்றி இப்பைக் காட்சியளிக்கின்றது. இதனை சற்று கூடுதலாக வழங்கும் நோக்கில் த்ரக்ஸ்டன் ஆர் எனும் தேர்வையும் த்ரக்ஸ்டன் வரிசையில் டிரையம்ப் வழங்கி வருகின்றது.

இந்த மாடல் ஸ்போர்ட்டி மற்றும் கஃபே ரேஸர் ஆகிய இருவிதமான ஸ்டைலைக் கொண்டிருக்கும். எனவேதான், சாகச பயண பிரியர்களின் விருப்பமான பைக்காக இது இருக்கின்றது. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பயன்படுத்தியது வழக்கமான த்ரக்ஸ்டன் மாடலைதான்.

இது 865 சிசி கொண்ட ஏர்-கூல்டு எஞ்ஜினைக் கொண்டு இயங்குகின்றது. இது அதிகபட்சமாக 69 பிஎச்பி மற்றும் 71.8 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்தகை அதி-திறன் கொண்ட சூப்பர் பைக்கிலேயே சுமார் 50 கிமீ பயணத்தை அவர் கடந்திருக்கின்றார்.

குர்பர்தாப் போபராய் பயணங்கள்மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகின்றது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் நீண்ட பயணத்தை மேற்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதுவே அவரால் டிரையம்ப் த்ரக்ஸ்டன் சூப்பர் பைக்கில் 50 ஆயிரம் கிமீ பயணிக்க தூண்டியிருக்கின்றது.