டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

அதிசெயல்திறன் மிக்க டுகாட்டி எஞ்சின் மற்றும் மிரட்டும் தோற்றத்துடன் அதி அற்புதமான ஹைப்பர் பைக் மாடலை வைரஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

இத்தாலியை சேர்ந்த வைரஸ் (Vyrus) நிறுவனம் விசேஷமான அம்சங்களுடன் பைக்குகளை உருவாக்குவதில் கைதேர்ந்த நிறுவனமாக விளங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் வடிவமைக்கும் பைக்குகள் உலக அளவில் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

இந்த நிலையில், ஏலியன் என்ற பெயரில் புத்தம் புதிய ஹைப்பர் பைக் மாடலை வைரஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பைக் பிரியர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கும் இந்த பைக் பெயருக்கு ஏற்றாற்போல் வேற்றுக் கிரகத்திற்கான மாடல் போலவே தோற்றமளிக்கிறது.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தாலும், விசேஷ உதிரிபாகங்கள் முடிந்தவரை இலகுவாக உருவாக்கப்பட்டு இருப்பதால் ஹைப்பர் பைக் என்ற டைட்டிலுடன் வசீகரிக்கிறது.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

இந்த பைக் மெக்னிஷியம் டபுள் ஒமேகா ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கார்பன் ஃபைபர் பேனல்கள், ரோட்டோபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் ஃபோர்ஜ்டு சக்கரங்கள் ஆகியவை இதற்கு வலு சேர்க்கும் அம்சங்களாக கூறலாம்.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

வைரஸ் ஏலியன் பைக்கில் அடுத்த மிக முக்கிய விஷயமாக, வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஹப் ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுடன் தொடர்பு இல்லாமல், கையாள்வதற்கு மிகச் சிறப்பாக இருக்கும்.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

டுகாட்டி பனிகேல் 1299 பைக்கில் இருக்கும் அதே 1,285சிசி வாட்டர் கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 205 எச்பி பவரையும், 144.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

வைரஸ் 982 M2 சூப்பர் பைக்கின் புகைப்போக்கி அமைப்புதான் இந்த ஹைப்பர் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பிரெம்போ ஜிபி4 பிரேக் சிஸ்டம் மற்றும் வைரஸ் புஷ் ராடு ட்வின் பைவோட் சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன.

டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்!

மொத்தம் எத்தனை ஏலியன் ஹைப்பர் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனைக்கு வரும் என்பது திண்ணம். விலை உள்ளிட்ட விபரங்களுக்கு வைரஸ் நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Italy based exotic bike maker, Vyrus has unveiled the Vyrus Alyen hyper bike and it will target to high profile customers around the world.
Story first published: Wednesday, April 8, 2020, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X