ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்ஸ்!

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் இளம் பெண்களை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகள் வளைத்துப்போட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஏன், சில இளம் பெண்களும்கூட ராயல் என்பீல்டின் தயாரிப்புகள்மீது அளவு கடந்த காதலைச் செலுத்தி வருகின்றனர்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

இதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகளில் ஒன்றான இன்டர்செப்டர் 650 மாடலை வாங்கியிருந்தார். இதேபோன்று, நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் ராயல் என்பீல்டு புல்லட் ரக பைக்குகளை வாங்கி வருகின்றனர்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

இந்நிலையில், ராயல் என்பீல்டு பைக்குகள்மீது அதீத ஆர்வம் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர், அதன் பைக்குகள் சிலவற்றை மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதை வைத்து பார்க்கையில், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெண் ரசிகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

அவர்கள் அனைவரும் ராயல் என்பீல்டு பைக்கை அமெரிக்கன் ஃபிளாட் டிராக் (American Flat Track) என்னும் போட்டியில் பங்கேற்பதற்காகவே மாடிஃபை செய்துள்ளனர். சமீபத்தில்தான் இந்த போட்டியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட பைக்குகள் பங்கு கொள்வதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தே, அப்பெண்கள் ராயல் என்பீல்டின் ட்வின் பைக்குகளைத் தேர்வு செய்து ஃபிளாட் ட்ராக்கிற்கு ஏற்ப மாடிஃபை செய்தனர்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்பாண்டிற்கான அமெரிக்கன் ஃபிளாட் டிராக் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நான்கு அமெரிக்க பெண்களும் கடும் சோகத்தில் உறைந்திருக்கின்றனர். இருப்பினும், மனம் சோர்வடையாமல் அடுத்த வருட போட்டிக்காக அப்பெண்கள் காத்திருக்கின்றனர்.

இவர்கள் நான்கு பேரும் இந்த போட்டிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களைப் பற்றியும், அவர்கள் மாடிஃபை செய்துள்ள பைக்கைப் பற்றிய தகவலையும் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

மெலிசா பாரிஸ் (Melissa Paris)

தனது 20ம் வயதிலேயே மோட்டார்சைக்கிளை கற்றுக் கொண்டதாக மெலிசா பாரிஸ் தெரிவித்துள்ளார். நாளடைவில் மோட்டார்சைக்கிள்களின் மீதிருந்த அதீத ஆர்வம் காரணமாக 125சிசி முதல் 250 சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகளை அவர் இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகன ரேஸ்களில் பங்குகொள்ள அவர் ஆரம்பித்துள்ளார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

அந்தவகையில், முதல் முறையாக 2009ம் ஆண்டு டேடோனா200 கலந்துக்கொண்டார். இதன்மூலம் உலக சூப்பர்ஸ்போர்ட் நிகழ்வுக்கு தகுதி பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் சூடினார்.

இந்நிலையிலேயே, நடப்பாண்டிற்கான அமெரிக்கன் ஃபிளாட் டிராக்கில் பங்குகொள்வதற்காக ஆர்வமுடன் காத்திருந்தார். இதற்காக, ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கை மாடிஃபை செய்து தயார் நிலையிலும் இருந்துள்ளார். ஆனால், கொரோனா வைரஸ் இதற்கு முட்டு கட்டையாக அமைந்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

ஆண்ட்ரியா லோத்ராப் (Andrea Lothrop)

ஆண்ட்ரியா அவரது தோழியுடன் இணைந்து கனடாவில் மோட்டோ ரெவரே என்ற DIY மோட்டார் சைக்கிள் கிளப்பை இயக்கி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களின் இயக்கவியல் பற்றிய தகவல் இவருக்கு ஓரளவிற்கு தெரியும் என கூறப்படுகின்றது. இதனாலயே எப்போதும் பைக்கும் கையுமாக அவர் இருந்து வருகின்றார். இதுதவிர சிற்பக்கலையில் பி.எஃப்.ஏ. சான்றிதழையும் அவர் பெற்றிருக்கின்றார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

இந்த திறனின் அடிப்படையிலேயே தனது ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 பைக்கை பிளாட் டிராக்கருக்கு இணயைாக அவர் மாடிஃபை செய்துள்ளார். இத்தகைய திறன்கள் இருப்பதன் காரணத்தினாலயே அமெரிக்கன் ஃபிளாட் டிராக் போட்டிக்கு ஆண்ட்ரியா லோத்ராப்பை போட்டுக் குழு தேர்வு செய்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

லனகிலா மேக்நாட்டன் (Lanakila MacNaughton)

லனகிலா மேக்நாட்டன் ஒரு போர்ட்லேண்டில் வசித்து வருகின்றார். இவர் புகைப்படக் கலைஞராக இருந்து வருகின்றனர். அவ்வப்போது மோட்டார்சைக்கிள் ரேசிலும் அவர் ஈடுபடுவார். ஆனால், புகைப்படத்தைக் காட்டிலும் பைக் ரேசிலேயே இவருக்கு அதிக ஆர்வம். இவர், தனது இருபதுகளின் ஆரம்பத்தில்தான் மோட்டார் சைக்கிள்களின்மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

இதைத்தொடர்ந்து ‘தி கேர்ல் மோட்டோ எக்ஸிபிட்' என்ற நிகழ்வைத் தொடங்கினார். இது முழுக்க முழுக்க பெண்களின் மோட்டார் சைக்கிள் கலாச்சாரத்தை மட்டுமே சிறப்பிக்கும் ஒரு பயண புகைப்பட கண்காட்சி ஆகும்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

இவர், ராயல் என்ஃபீல்டின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகின்றார். இதன்வெளிப்பாடக அவர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் அதிகம் சுற்றி திரிகின்றார். இந்த நிலையில்தான், ஃபிளாட் டிராக்கில் பங்கேற்பதற்காக ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 பைக்கை மாடிஃபை செய்தார். ஆனால், நடப்பாண்டிற்கான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருத்த ஏமாற்றத்தில் அவர் இருக்கின்றார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

ஜில்லியன் டெஸ்செனஸ் (Jillian Deschenes)

மின்னெசோட்டா என்னும் நாட்டைச் சேர்ந்தவர் ஜில்லியன். இவர் 2019ம் ஆண்டிற்கான 23 ஏஎம்ஏ ஃபிளாட் டிராக் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் ஆவார். இதுமட்டுமின்றி பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு இவர் வெற்றி வாகையை சூடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 2020 ஆண்டிற்கான அமெரிக்கன் ஃபிளாட் டிராக் போட்டியிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என தயாராகி வந்தார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 4 பைக்குகளை உருமாற்றிய அமெரிக்க இளம் பெண்கள்.. அனைத்துமே ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள்!

ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அனைத்திற்கும் முற்று புள்ளியை வைத்துள்ளது. இதனால், போட்டியில் கலந்துக்கொள்ள முடியவில்லை என இப்பெண்களும், பைக்குகள் சீறிப் பாய்வதை காண முடியவில்லை என்ற துக்கத்தில் ஃபிளாட் டிராக் ரசிகர்களும் உறைந்திருக்கின்றனர்.

Source: RideApart

More from DriveSpark

Article Published On: Saturday, April 25, 2020, 21:28 [IST]
English summary
Womens Modifies Royal Enfield Interceptor 650 As Flat Tracker Bikes. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+