உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ மின்சார ஸ்கூட்டருக்கே டஃப் கொடுக்கும் வேகம்!

உலகிலேயே அதிக வேகத்தில் இயங்கக்கூடிய ஒற்றை வீல் மின் வாகனம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

இந்தியா மட்டுமில்லைங்க உலக நாடுகள் பலவற்றின் சாலையை விரைவில் மின்சார வாகனங்களே ஆளவிருக்கின்றன. இதனை உறுதிச் செய்கின்ற வகையிலேயே புதுமுக மின்வாகனங்களின் அறிமுகம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதிலும் அண்மைக் காலங்களாக மின்சார வாகனத்துறை புதிய பரிணாம வளர்ச்சியை அடையத் தொடங்கியிருக்கின்றது.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

அதாவது, தொழில்நுட்ப வசதியிலும், ரேஞ்ஜ் விகிதத்திலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் அது வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை உறுதிச் செய்யும் வகையில் ஓர் சம்பவம் தற்போது அமெரிக்காவில் அரங்கேறியிருக்கின்றது. அதாவது, அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் துறை மாணவர்கள் உலகின் அதி வேக மோனோ வீல் மின்சார வாகனத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

இந்த மின்சார வாகனத்திற்கு அவர்கள் இவி360 எனும் பெயரை வைத்துள்ளனர். இது அதிகபட்சமாக மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. அதேசமயம், ட்யூக் பல்கலைக் கழக மாணவர்கள் இதனை மணிக்கு 112 கிமீ வேகத்தில் செல்லும் திறனில் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

இது என்னங்க ஆச்சரியம் என உங்களுக்கு கேட்கத் தேன்றலாம். ஒற்றை வீலுடைய (மோனோவீல்) வாகனம் இத்தகைய அதிக வேகத்தில் பறப்பது உலக சாதனை ஆகும். இதுவே முதல் முறையும் கூட. எனவேதான் மிகச் சிறப்பு வாய்ந்த வாகனமாக இதனை வாகன ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

இது அதிக திறன் கொண்ட மின்வாகனம் என்பதால் இவி360-யை வைத்து அதனை உருவாக்கிய மாணவர்கள் கின்னஸ் சாதனை புரிய திட்டுமிட்டுள்ளனர். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அதற்கு தடை கல்லாய் அமைந்துள்ளது.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக இதுபோன்ற சாதனை நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால் மாணவர்கள் லேசான சோகத்தைக் கொண்டாலும், புதிய உத்வேகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

இவி360 மோனோவீல் மின்சார வாகனத்தில் அதிக திறனை வெளிப்படுத்த 23கிலோவாட் மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 11kW வரை திறனை வெளிப்படுத்தும். இதற்கான மின் திறனை 1.58kWh லித்தியம்-பாலிமர் பேட்டரி வழங்குகின்றது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 14 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

இந்த வாகனம்குறித்த மற்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இவி360 ஓர் ஒற்றை டிஸ்கில் இயங்கக்கூடிய மின்வாகனம். இதுமாதிரியான மின் வாகனங்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு பெரியளவில் வரவில்லை. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களில் இதுபோன்ற மின் வாகனங்களைப் பயன்படுத்துவதை நம்மால் பார்க்கமுடிகின்றது.

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

தற்போது உருவாகியிருக்கும் இந்த மின்வாகனமும் ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கின்றது. அதன் வேகம் மற்றும் உருவம் என அனைத்து தரப்பிலும் இதற்கான தகுதியை அது பெற்றிருக்கிறது. ஆனால், இது திரைப்படங்களில் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியே.

இந்த அதிதிறன் கொண்ட மின்சார வாகனத்தை உருவாக்கிய மாணவர்கள் அதுகுறித்து கூறியதாவது, "வகுப்புகளில் கற்ற கோட்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான சரியான வாய்ப்பாக இந்த திட்டம் இருக்கிறது. பார்வையாளர்கள் சிலருக்கு இது குறைபாடுடைய வாகனத்தைப் போன்று தோன்றலாம். ஆனால், அதில் நன்மைகள் ஏராளமாக உள்ளன. இதன் ஸ்டீயரிங் கோணம் மிகவும் சிறியது"...

உலகின் மிக வேகமான ஒற்றை வீல் மின் வாகனம்! நம்ம ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வேகம்...

..."விரும்பிய திசையில் சாய்வதன் மூலம் சிறிய திசையை மாற்ற முடியும். எனவே, ஸ்டியரிங் கிரிப், பிரேக் மற்றும் திறனை அதிகரிக்க ஆகியவற்றிற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஓர் குறைபாடு என்னவென்றால், மோனோவீல்கள் லேசான அதிர்வை வழங்கும் வகையில் இருக்கின்றன" இவ்வாறு பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 25, 2020, 6:29 [IST]
English summary
This Is World’s Fastest Electric Monowheel. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+