கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

யமஹா நிறுவனம் அதன் அதிரடி முடிவு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த இந்திய வாகனத்துறைய மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்தன. கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய விற்பனை வீழ்ச்சி கொரோனா காலத்தில் மேலும் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. இந்த நிலையில் மீள்வதற்கு வழியே இல்லையா என வாகன உற்பத்தி நிறுவனங்கள் அலை மோதிக் கொண்டிருந்தவேலையில் பண்டிகைக் காலங்கள் புதிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ஆமாங்க, வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் வாகனங்களின் விற்பனைச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா அதன் ஸ்கூட்டர்களின் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

125 சிசி திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபஸ்ஸினோ மற்றும் ரே இசட்ஆர் ஆகிய சீரிஸ்களில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்களின் விலை மட்டுமே தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 800 வரை இவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் முன்னதாக ரூ. 69,530க்கு விற்கப்பட்டு வந்த யமஹா ஃபஸ்ஸினோ 125 டிரம் பிரேக் வேரியண்டின் விலை தற்போது ரூ. 73,060 ஆக உயர்ந்துள்ளது.

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இதேபோன்று, ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரின் விலையிலும் ரூ. 800 உயர்த்தப்பட்டதால் இதன் ஆரம்ப மாடலின் விலை ரூ. 70,330 ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது மூன்றுவிதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விலை விபரங்களைப் பட்டியலாகக் கீழே காணலாம்.

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரின் விலை:

ஃபஸ்ஸினோ 125 (டிரம் பிரேக்): ₹69,530

ஃபஸ்ஸினோ 125 (டிஸ்க் பிரேக்): ₹72,030

ஃபஸ்ஸினோ 125 (டீலக்ஸ் டிரம்): ₹70,530

ஃபஸ்ஸினோ 125 (டீலக்ஸ் டிஸ்க்): ₹73,060

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டரின் விலை:

ரே இசட்ஆர் 125 (டிரம்): ₹70,330

ரே இசட்ஆர் 125 (டிஸ்க்): ₹73,330

ரே இசட்ஆர் 125 (ஸ்ட்ரீட் ரேல்லி): ₹74,330

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

தற்போது விலை உயர்வைப் பெற்றிருக்கும் இரு ஸ்கூட்டர்களுமே உருவத்தில் வேறுபட்டவை ஆகும். ஆனால், இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் எஞ்ஜின் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. இதில், 125 சிசி திறன் கொண்ட, ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் ஆகும். இது, 6500 ஆர்பிஎம்மில் 8.4 பிஎச்பி பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 9.7 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

கொஞ்சம் விற்பனை உயர்ந்த உடனே வேலையை காட்டும் யமஹா... இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இவ்விரு எஞ்ஜின்களும் சிவிடி கியர்பாக்ஸில் இயங்குகின்றன. இந்த ஸ்கூட்டர்களின் ஒட்டுமொத்த எடை 99 கிலோவாகும். இது பிற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சற்று எடைக் குறைவாகும். ஆகையால், இதனைக் கையாள்வது சற்று சுலபமாக இருக்கும். யமஹா நிறுவனம் அண்மையில்தான் எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட் எஸ் எஃப்ஐ பைக்குகளின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Fascino 125 And Ray ZR 125 Scooters Prices Hiked In India. Read In Tamil.
Story first published: Tuesday, November 10, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X