யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் எஃப்இசட் மற்றும் எஃப்இசட் எஸ் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

யமஹாவின் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையினால் இந்த இரு எஃப்இசட் மோட்டார்சைக்கிள்களின் விலைகளும் தலா ரூ.1,000 உயர்ந்துள்ளன. இதன் காரணமாக எஃப்இசட் எஃப்ஐ பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,02,700 ஆக அதிகரித்துள்ளது.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

அதுவே யமஹா எஃப்இசட்-இன் எஸ் வேரியண்ட்டை இனி ரூ.1,04,700 என்ற விலையிலும் டார்க் நைட் எடிசனை ரூ.1,06,200 என்ற எக்ச்ஷோரூம் விலையிலும் தான் வாங்க முடியும். எஃப்இசட் பைக்கிற்கும் எஃப்இசட் எஸ் பைக்கிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

கூடுதலாக வழங்கப்படும் சில ஸ்டைலிங் பாகங்களில்தான் இரண்டும் வேறுபடுகின்றன. இவை இரண்டும் தாழ்வான-ஸ்லங், காம்பெக்ட் எல்இடி ஹெட்லேம்ப், நேரான ஹேண்டில்பார், நீட்டிப்பு பேனல்களுடன் பருத்த பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்டப்பி எக்ஸாஸ்ட் சிஸ்டங்களை சிறப்பம்சங்களாக கொண்டுள்ளன.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

யமஹா எஃப்இசட் பைக்குகளில் மற்ற அம்சங்களாக முழு-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 13 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் மற்றும் ஒற்றை துண்டு இருக்கை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

இயக்கத்திற்கு இரண்டிலும் 149சிசி, சிங்கிள்-சிலிண்டர், காற்று-குளிர்விப்பான், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 12.2 பிஎச்பி மற்றும் 13.6 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

17 இன்ச் அலாய் சக்கரங்களுடன் வழங்கப்படுகின்ற யமஹா எஃப்இசட் பைக்குகளில் சஸ்பென்ஷனுக்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் பொருத்தப்படுகிறது. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க டிஸ்க் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் வழங்கப்படுகின்றன.

யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஷோரூம் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!! புதிய விலைகள் இவைதான்

அன்றாட பயன்படுத்தப்படுக்கூடிய ப்ரீமியம் பைக்குகளின் பிரிவில் நிறுத்தப்படுகின்ற யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட் எஸ் பைக்குகளுக்கு பஜாஜ் பல்சர் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹோண்டா எக்ஸ்-பிளேட் மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, November 8, 2020, 15:30 [IST]
English summary
Yamaha FZ & FZ-S prices hiked in Indian market.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+