எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

யமஹா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் எஃப்இசட்-எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக் மாடல்களின் விலைகளை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

யமஹா நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 அப்டேட்டை பெற்ற சமீபத்திய பைக்குகளில் இந்த எஃப்இசட்-எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக்குகளும் அடங்குகின்றன. இவற்றின் விலைகள் முன்னதாக கடந்த மே மாதத்தில் தான் பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதன்முறையாக ரூ.500 அதிகரிக்கப்பட்டு இருந்தன.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இரண்டின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் ரூ.2000 அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் முன்பு ரூ.99,700 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எஃப்இசட்-எஃப்ஐ பைக்கை இனி ரூ.1,01,700 என்ற விலையில் தான் பெற முடியும்.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

அதேபோல் முன்பு இந்த விலையை கொண்டிருந்த எஃப்இசட்எஸ்-எஃப்ஐ மாடலின் விலை தற்போது ரூ.1,03,700 ஆக அதிகரித்துள்ளது. இதன் டார்க் நைட் வெர்சனின் விலையும் ரூ.2,000 உயர்ந்து தற்போது ரூ.1,05,200 என்ற நிலையை அடைந்துள்ளது.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த இரு யமஹா பைக் மாடல்களிலும் ஒரே 149சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-ல் 12 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 13.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

இந்த இரு பைக்குகளும் வேறுபடுவது எதில் என்று பார்த்தால், நிறத்தேர்வுகளில் தான். ஏனெனில் எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பிஎஸ்6 பைக்கானது டார்க் மேட் ப்ளூ, மேட் ப்ளாக், க்ரே மற்றும் சியான் ப்ளூ என்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

அதுவே எஃப்இசட்-எஃப்ஐ பைக்கிற்கு மெட்டாலிக் ப்ளாக் மற்றும் ரேசிங் ப்ளூ என்ற இரு நிறங்கள் மட்டும் தான் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. தற்போதைய விலை அதிகரிப்பிற்கு எந்த காரணமும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கபடவில்லை. அதேபோல் விலை அதிகரிப்புக்கு ஏற்றப்படி பைக்குகளிலும் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

எஃப்இசட் பைக்குகளின் விலைகளை 2-வது முறையாக உயர்த்தியது யமஹா... விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது...

இதனால் இரு பைக்குகளிலும் முக்கிய அம்சங்களாக வழங்கப்பட்டு வரும் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 11, 2020, 9:30 [IST]
English summary
Yamaha Increases The Prices Of The BS6 FZ-Fi and FZS-Fi For The Second Time
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+