ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

உலக புகழ்பெற்ற யமஹா நிறுவனம் அதன் பிரபலமான ஆர்15 பைக்கின் அடிப்படையிலான ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் யமஹா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனமாக ஆர்15 பைக் இருக்கின்றது. இந்த பைக்கின் அடிப்படையில் ஏரோக்ஸ் 155 எனும் புதுமுக ஸ்கூட்டரை யமஹா தற்போது அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

ஆசியாவில் உள்ள நாடுகளிலேயே யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிகம் வரவேற்பும் கிடைக்கும் நாடான இந்தோனேசியாவிலேயே இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதுமுக ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான திறன் மட்டுமின்றி தோற்றத்தையும் யமஹா வழங்கியுள்ளது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

குறிப்பாக, ஏரோக்ஸ் ஸ்கூட்டரின் அதி சூப்பர் திறனுக்காக 155 சிசி திறன் கொண்ட லிக்யூட்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினை யமஹா பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 15 பிஎஸ் பவரையும், 13.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதே திறனைதான் யமஹா ஆர்15 பைக்கும் வெளிப்படுத்துகின்றது. ஆனால், இது ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. அதேசமயம், ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் சிவிடி-இல் இயங்குகின்றது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

ஏரோக்ஸ் அதன் பழைய மாடல்களைக் காட்டிலும் கூடுதல் திறனை வெளியேற்றும் வசதியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, பழைய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரைக் காட்டிலும் புதியது 0.3 பிஎஸ் மற்றும் 0.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது தவிர முன்பைக் காட்டிலும் மிக துடிப்பான தோற்றத்திலும் இந்த ஸ்கூட்டர் காணப்படுகின்றது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

இதற்காக, கட்டுமஸ்தான உடல் பேனல் மற்றும் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், ஸ்கூட்டரின் முகப்பு பகுதியில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம், ட்யூவல் பாட் அமைப்புக் கொண்ட ஹெட்லேம்ப் செட்டப் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது எல்இடி தரத்திலானதாகும்.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

சிறப்பான தொழில்நுட்ப வசதிக்காக முழு டிஜிட்டல் தரத்திலான எல்சிஇடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது, ப்யூவல் அளவு, நாள் மற்றும் நேரம் என பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியது. இதில், ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக்குகில்கூட இதே ப்ளூடூத் இணைப்பு வசதியை யமஹா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

இந்த ஸ்கூட்டரின் தோற்றம் ஸ்கூட்டர்கள் உலகில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஸ்டைலில் இருக்கின்றது. குறிப்பாக, மிக பொதுவான வடிவமைப்பாக காட்சியளிக்கப்படும் ரைடரின் கால் வைக்கும் பகுதி, இந்த ஸ்கூட்டரில் மிக முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கால்களை பக்கவாட்டு பகுதியில் மட்டுமே வைக்கும் வகையில் அதன் உருவ அமைப்பு காட்சியளிக்கின்றது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

தற்போது இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் இணைப்பு அம்சத்தின் மூலம் கூடுதலாக பல்வேறு தகவல்களை அதன் உரிமையாளரால் அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, செல்போனு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி முதல் ஸ்கூட்டர் நிகழ்நேரத்தில் எங்கு இருக்கின்றது, எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

இந்த ஸ்கூட்டரில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் இரு கேஸ்-சார்ஜட் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், கவர்ச்சியான தோற்றத்திற்காக கோல்டன் நிறத்திலான 14 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக ஒரு வீலில் டிரம் பிரேக்கும், மற்றொன்றில் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்15 பைக்கிற்கு இணையான திறனில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்... ஸ்கூட்டர் உலகின் புரட்சியாளன்!

இதுதவிர ஏராளமான பிரீமியம் வசதிகள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் சற்று காஸ்ட்லியான ஸ்கூட்டரா ஏரோக்ஸ் இந்தோனேசியாவில் அறிமுகமாகியிருக்கின்றது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 1.32 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, November 6, 2020, 19:29 [IST]
English summary
Yamaha Launched Aerox 155 Scooter In Indonesian Market. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+