அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

யமஹா நிறுவனத்தின் பிரமாண்ட ஷோரூமான ப்ளூ ஸ்கொயர் அண்ணா சாலையை அடுத்து தற்போது அசோக் நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இந்தியாவில் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான இருசக்கர வாகன நிறுவனமாக யமஹா இருக்கின்றது.

இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவுகின்றது. குறிப்பாக, ஆர்15, எஃப்இசட், எம்டி15, ஃபஸ்ஸினோ, இசட்ஆர், ரே ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு ஏகபோகமான வரவேற்பு நிலவுகின்றது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இதனால், யமஹா நிறுவனம் இந்தியாவில் தனி கவனம் கொண்டு அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

இதுமட்டுமின்றி, ஷோரூம் அமைப்பதிலும் வாகன அறிமுகத்தில் காண்பிப்பதைப் போன்ற தனித்துவமான ஆர்வத்தைச் யமஹா செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில், ப்ளூ ஸ்கொயர் எனப்படும் பிரமாண்ட ஷோரூமை இந்தியாவில் நிறுவ ஆரம்பித்திருக்கின்றது யமஹா.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இந்த ஷோரூமை, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து சென்னை அண்ணா சாலையில் தொடங்கியது. இங்கு தொடங்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் சுமார் 4,000 சதுர அடியில் நிறுவப்பட்டுள்ளது. இது மிகவும் பெரிய ஷோரூம் ஆகும். நாட்டிலேயே இருசக்கர வாகனங்களுக்காக திறக்கப்படும் மிகப்பெரிய ஷோரூம்களில் இது முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இந்நிலையில், இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் விதமாக தற்போது மீண்டுமொரு ஷோரூம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஷோரூமையும் யமஹா நிறுவனம் சென்னையிலேயே தொடங்கியிருக்கின்றது. இம்முறை, சென்னை அசோக் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் சுமார் 2,450 சதுர அடியைக் கொண்டதாக இருக்கின்றது. இங்கும் அண்ணா சாலை ப்ளூ ஸ்கொயர் ஷோரூமில் காணப்படுவதைப்போன்று பிரத்யேக மாடல்கள் விற்பனைக்கு முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

குறிப்பாக, ரேசிங் டிஎன்ஏ என்றழைக்கப்படும் யமஹாவின் தனித்துவமான ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து டூ வீலர்களும் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

மேலும், சில கான்செப்ட் மாடல் இருசக்கர வாகனங்களையும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் நிலைநிறுத்த யமஹா திட்டமிட்டிருக்கின்றது. அசோக் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் ஸ்ரீ மோட்டார்ஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டிருக்கின்றது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இங்கு ஸ்கூட்டர்கள், பைக்குகள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்கள் மற்றும் ரைடருக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களும் விற்பனைச் செய்யப்பட உள்ளன. மேலும், வாகனங்களுக்கு தேவையான அக்ஸசெரீஸ்கள் இங்கு கிடைக்கும்.

யமஹா நிறுவனம் "கால் ஆஃப் தி ப்ளூ" (Call of the Blue) என்ற பிரச்சாரத்தை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதனடிப்படையிலேயே, ப்ளூ கோர் வாகனங்கள் இந்தியாவில் களமிறக்கப்பட்டு வருகின்றது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இதைத்தொடர்ந்து, தற்போது ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை நாடு முழுவதும் தொடங்கும் பணியை யமஹா மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பான பிரமாண்ட ஷோரூமை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து சென்னையில் திறந்து வருகின்றது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இதுதவிர, நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இதுபோன்ற பிரமாண்ட ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை தொடங்க யமஹா திட்டமிட்டிருக்கின்றது. இதனை 2020ம் ஆண்டின் இறுதிக்குள் செய்துமுடிக்க இருப்பதாக யமஹா இலக்கு நிர்ணயித்திருக்கின்றது.

இந்த ஷோரூம்களில் இருசக்கர வாகனத்தை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகை வழங்கவும் யமஹா திட்டமிட்டுள்ளது.

அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...

இத்துடன், யமஹா நிறுவனம் அதன் வாகனங்களை பிஎஸ் தரத்திற்கு இணக்கமாக அப்கிரேட் செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில், அதன் அதிகம் வரவேற்பு கிடைக்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அப்கிரேஷனை வழங்கி வருகின்றது யமஹா.

More from DriveSpark

Article Published On: Monday, March 9, 2020, 16:07 [IST]
English summary
Yamaha Launched Second Blue Square Showroom In Chennai Ashoknagar. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+