தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

யமஹா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த இருசக்கர மாடல்களில் ஒன்றான எஃப்இசட்எஸ் எஃப்ஐ மாடலில் விண்டேஜ் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதிய தொழில்நுட்ப வசதியுடன் அது அறிமுகப்படுத்தியுள்ளது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. குறிப்பாக, கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல விற்பனை வளர்ச்சி கிடைக்க தொடங்கியுள்ளது. முன்பெப்போதும் இல்லாத வகையிலான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்ததே தற்போதைய விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த நிலையில், யமஹா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பைக் மாடல்களில் ஒன்றான எஃப்இசட்எஸ் எஃப்ஐ மாடலில் விண்டேஜ் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் சிறப்பு வசதியாக இணைப்பு வசதியை அது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ப்ளூடூத் இணைப்பு வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதன் மூலம் பைக்கை ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைக்கும்போது பைக் குறித்த பல்வேறு தகவல்களை நம்மால் செல்போனிலேயே பெற முடியும். இதற்கான பிரத்யேக செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கின்றது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

புதிய வின்டேஜ் எடிசன் எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கை யமஹா நிறுவனம் ரூ. 1.09 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்லது. இது 150சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனம் ஆகும். இந்தியாவில் 150சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு எப்போதுமே டிமாண்ட் எக்கச்சக்கம். இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே இந்த பைக்கில் இணைப்பு வசதியை யமஹா அறிமுகம் செய்துள்ளது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த பைக் நடப்பு வாரத்தில் இருந்தே டெலிவரிக்குக் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான மாடலைக் காட்டிலும் லேசான வித்தியாசத்தை இந்த பைக்கில் நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, இருக்கை சற்று எதிர்மறையான நிறத்தில் காட்சியளிக்கின்றது. இத்துடன், புதிய நிறம் மற்றும் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை இப்பைக்கில் யமஹா சேர்த்திருக்கின்றது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

யமஹா நிறுவனம் இந்த பைக்கில் 149 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இதே எஞ்ஜின்தான் எஃப்இசட் எஃப்ஐ மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 12.4 எச்பி பவரையும், 13.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

தரமான அறிமுகம்... சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் யமஹா பைக் அறிமுகம்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

ரைடர்களின் பாதுகாப்பு பயணத்திற்காக முன்பக்க வீலில் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதே பாதுகாப்பு வசதியைதான் எஃப்இசட் எஃப்ஐ பைக்கிலும் காணப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launches Vintage Edition FZS FI With Bluetooth Connectivity Tech. Read In Tamil.
Story first published: Tuesday, December 1, 2020, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X