புதிய யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய யமஹா எம்டி15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆரம்ப ரக பெர்ஃபார்மென்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா எம்டி-15 பைக் இளைஞர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த பைக்கின் ஸ்டைல், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை இளைஞர்களை கவர்ந்த விஷயங்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கின் 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா பைக்கின் பிஎஸ்-4 மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 19.3 எச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், பிஎஸ்-6 மாடல் எஞ்சின் திறன் 0.8 எச்பி வரையில் குறைந்து 18.5 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. அதேபோன்று, டார்க் திறனும் 13.9 என்எம் என்ற அளவில் இருக்கிறது.

புதிய யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆனால், பைக்கின் எடையில் மாற்றம் இல்லை. புதிய யமஹா எம்டி-15 பைக் 138 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் பின்சக்கரத்தில் ரேடியல் டயர் பொருத்தப்பட்டு வந்துள்ளது. அதேபோன்று, சைடு ஸ்டான்டு இருக்கும்போது எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாத வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் எஞ்சின் மட்டுமின்றி, ஐஸ் ஃபுளுவோ வெர்மில்லியன் என்ற புதிய வண்ணத் தேர்வு வழங்கப்படுகிறது. தாய்லாந்து மற்றும் இந்தோனேஷிய சந்தைகளில் கிடைக்கும் இந்த விசேஷ வண்ணத் தேர்வு இப்போது இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய யமஹா எம்டி15 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா மெட்டாலிக் பிளாக் மற்றும் டார்க் மேட் புளூ என்ற வண்ணத்திற்கு ரூ.1,38,900 என்ற விலையிலும், ஐஸ் ஃபுளூவோ வெர்மில்லியன் என்ற வண்ணத் தேர்வுக்கு ரூ.1,39,400 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலைவிட புதிய பிஎஸ்-6 மாடலின் விலை ரூ.3,000 வரை அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 7:10 [IST]
English summary
Yamaha has launched MT-15 bike with BS6 compliant engine prices starting at Rs 1.38 (Ex, Showroom).
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+