இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஒய்இசட்எஃப்-ஆர்15 வி3.0 பைக்கின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலையை எந்தவொரு அறிவிப்பும் இன்றி அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன் யமஹா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அப்டேட் செய்துள்ளது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

இந்த வகையில் ஆர்15 பைக்கின் மூன்று நிறத்தேர்வுகளும் விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. அதேநேரம் இந்த மூன்று தேர்வுகளும் ஒரே மாதிரியான விலை உயர்வை பெறவில்லை. ஏனெனில் ஒவ்வொன்றின் விலை அதிகரிப்பும் ரூ.500- ரூ.1,000 அளவில் உள்ளது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பிற்கு யமஹா நிறுவனத்தில் இருந்து இதுவரை எந்தவித காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும் இந்த விலை அதிகரிப்பு தொடர் ஊரடங்கு உத்தரவினால் நிறுவனம் சந்தித்துவரும் நஷ்டத்தை சமாளிக்கும் முயற்சியாகவே இருக்கும்.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

ஆர்15 மோட்டார்சைக்கிளின் தண்டர் க்ரே நிற தேர்வு ரூ.1,45,000 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த விலை உயர்வினால் இனி இந்த வேரியண்ட் ரூ.1,45,800 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

அதேபோல் டார்க் நைட் வேரியண்ட்டின் விலை ரூ.600 அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த வேரியண்ட்டை ரூ.1,47,900 எக்ஸ்ஷோரூம் விலையில் தான் இனிமேல் பெற முடியும். ஆர்15 வி3.0 மோட்டார்சைக்கிள் அதிகளவில் விற்பனையாகும் ரேசிங் ப்ளு தேர்வு அதிகப்பட்சமாக ரூ.1000-ஐ விலை உயர்வாக பெற்றுள்ளது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இந்த நிறத்தேர்வின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1,46,900-ஆக அதிகரித்துள்ளது. யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 மாடலின் இந்த மூன்று நிறத்தேர்வுகளிலும் ஒரே 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

ஃப்யூல் இன்ஜெக்டட் சிஸ்டத்துடன் உள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19 பிஎச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸை ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக கொண்டுள்ள இந்த 150சிசி பைக்கில் முழு-எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

இவற்றுடன் இந்த பைக்கில் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பு உணர்வை வழங்கும். இதற்கிடையில் யமஹா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட எஃப்இசட்-25 மற்றும் எஃப்இசட்எஸ்-25 பைக்குகளின் இந்திய அறிமுக பணிகளிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் யமஹா ஆர்15 பைக்கின் விலை அதிகரிப்பு...

இதற்கு ஏற்றாற்போல் ஊரடங்கிலும் சிறிய தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் மிக விரைவில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இரு 250சிசி பைக்குகளின் கூடுதல் ஆக்ஸஸரீகளின் விலைகளை அதிகாரப்பூர்வ இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2020, 17:30 [IST]
English summary
Yamaha YZF-R15 V3.0 gets costlier in India by this much: Check new prices!
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+