2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா?

2020 இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸிங் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகுறித்த சுவாரஷ்ய முடிவுகளை இப்பதிவில் காணலாம்.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

ஓராண்டைக் கடந்தும் கோவிட்-19 வைரஸ் உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் கொடூர தாக்கத்தின் காரணமாக பல்வேறு நிகழ்வுகள் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில நிகழ்வுகள் கால தாமதத்துடன் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், வாகன உலகம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் எந்தவொரு அறிவிப்புமின்றி ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

இந்நிலையில், கணிசமான கால தாமத்துடன் தொடங்கிய இந்தியன் நேஷ்னல் மோட்டார்சைக்கிள் டிராக் சேம்பியன்ஷிப் போட்டி தற்போது வெற்றி கரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இப்போட்டியின் இரண்டாம் மற்றும் கடைசி சுற்றுகள் சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் (MMRT) நடைபெற்றது.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

இந்த நிலையில், 2021 ஜனவரி 24ல் நடைபெற்ற இறுதி சுற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்பது பற்றிய தகவலை விளையாட்டு கமிட்டி வெளியிட்டிருக்கின்றது. 1051சிசி பிரிவு போட்டியின் வெற்றியாளராக ஹேமந்த் முத்தப்பா அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

பெங்களூருவைச் சேர்ந்த இவர் இந்த சேம்பியன்ஷிப் பட்டத்தை இத்துடன் நான்கு முறையாக வென்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கினைக் கொண்டு 7.879 செகண்டுகளில் 302 மீட்டர் இலக்கை வெற்றிகரமாக முடித்திருக்கின்றார். இவருக்கு அடுத்தபடியாக பாபா சடகோபன் 8.263 செகண்டுகளில் இலக்கைக் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றார்.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

மூன்றாம் இடத்தை 8.362 செகண்டுகளில் கடந்து ஹஃபிஸுல்லா கான் என்பவர் பிடித்திருக்கின்றார். இதில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும் ஹேமந்த் முத்தப்பாவின் பைக்கை ஷரன் பிரதாப் என்பவரே ட்யூப் செய்ததாகக் கூறப்படுகின்றது. ஹேமந்த் முத்தப்பா 1050 சிசி போட்டி பிரிவில் மட்டுமின்றி 850 சிசி பிரிவிலும் கலந்துக் கொண்டிருக்கின்றார்.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

இப்பிரிவிலும் தங்க பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த போட்டியில் அவர் சுசுகி ஹயபுசா பைக்கைப் பயன்படுத்தியிருக்கின்றார். இப்பைக்கைப் பயன்படுத்தியே 8.071 செகண்டுகளில் இலக்கை அவர் அடைந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜூபைர் அலி ஜங்க் இந்த பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றார்.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

இவர், 8.202 செகண்டுகளில் இலக்கை நிறைவு செய்திருக்கின்றார். இவருக்கு அடுத்தபடியாக பாபா சடகோபன் 8.306 செகண்டுகளில் இலக்கை அடைந்து மூன்றாம் இடத்தைத் தட்டிச் சென்றார். இவர்கள் மூவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ஆகையால், ஐஎஸ்ஆர்பி போட்டியில் இது புதிய வரலாற்றைப் படைத்திருக்கின்றது.

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

பிரிவு வாரியாக போட்டியின் வெற்றியாளர்களைக் கீழே காணலாம்.

சுற்று 2 பந்தய முடிவுகள்:

1051 சிசிக்கு மேல் வகுப்பு:

முதல் இடம்: ஹேமந்த் முத்தப்பா (07.879 விநாடிகள்)

2வது இடம்: பாபா சடகோபன் (08.263 விநாடிகள்)

3வது இடம்: ஹபீசுல்லா கான் (08.362 விநாடிகள்)

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

815-1050 சிசி வகுப்பு:

முதல் இடம்: முத்தப்பா (08.071 விநாடிகள்)

2 வது இடம்: சுபைர் அலி ஜங் (08.202 விநாடிகள்)

3 வது இடம்: பாபா சடகோபன் (08.306 விநாடிகள்)

361-550 சிசி வகுப்பு:

முதல் இடம்: கார்த்திக் மாட்டேட்டி (12.325விநாடிகள்)

2 வது இடம்: அயாஸ் (12.360 விநாடிகள்)

3 வது இடம்: துல்சி ராம் (12.447 விநாடிகள்)

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

226-360 சிசி வகுப்பு:

முதல் இடம்: பி.எம்.சூர்யா (12.532 விநாடிகள்)

2 வது இடம்: ஜே.பாரத் ராஜ் (12.536 விநாடிகள்)

3 வது இடம்: சங்கர் குரு (13.166 விநாடிகள்)

165 சிசி வரை வகுப்பு:

முதல் இடம்: ஜே.பாரத் ராஜ் (14.420 விநாடிகள்)

2 வது இடம்: பி.எம்.சூர்யா (14.465 விநாடிகள்)

3 வது இடம்: ஆர்.அரவிந்த் கணேஷ் (14.526 விநாடிகள்)

பெண்கள் வகுப்பு (165 சிசி):

முதல் இடம்: ஆன் ஜெனிபர் (16.858 விநாடிகள்)

2 வது இடம்: ஆர்.வி.சிம்கி (17.077 விநாடிகள்)

3 வது இடம்: நிவேட்டா ஜெசிகா (17.156 விநாடிகள்)

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

2-ஸ்ட்ரோக் (165 சிசி வரை):

முதல் இடம்: அயாஸ் (12.959 விநாடிகள்)

2 வது இடம்: முகமது துஹீத் (13.220 விநாடிகள்)

3 வது இடம்: கலீம் பாஷா (13.224 விநாடிகள்)

2-ஸ்ட்ரோக் (130 சிசி வரை):

முதல் இடம்: முகமது ரபீக் (13.200 விநாடிகள்)

2 வது இடம்: முஜாஹித் பாஷா (13.452 விநாடிகள்)

3 வது இடம்: முகமது துஹீத் (13.687 விநாடிகள்)

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

1051 சிசி வகுப்பிற்கு மேல் 2020 தேசிய சாம்பியன்ஷிப் வெற்றியாளர்கள்:

ஹேமந்த் முத்தப்பா (மந்த்ரா ரேஸிங்)

815-1050 சிசி வகுப்பு:

ஹேமந்த் முத்தப்பா (மந்த்ரா ரேஸிங்)

361-550 சிசி வகுப்பு:

ஐயாஸ் (தனியார்)

226-360 சிசி வகுப்பு:

ஜே. பாரத் ராஜ் (ரூலெக்ஸ் ராக்கர்ஸ் ரேசிங்)

2020இந்தியன் நேஷ்னல் டிராக் ரேஸ் சேம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள்... 2 பிரிவுகளில் தங்கத்தை வென்ற பெங்களூரர் வீரர்!!

165 சிசி வகுப்பு வரை:

ஜே. பாரத் ராஜ் (ருலெக்ஸ் ராக்கர்ஸ் ரேசிங்)

பெண்கள் வகுப்பு (165 சிசி):

ஆன் ஜெனிபர் (ஸ்பார்க்ஸ் ரேசிங்)

2-ஸ்ட்ரோக் (165 சிசி வரை):

அயியாஸ் (தனியார்)

2-ஸ்ட்ரோக் (130 சிசி வரை):

முகமது ரபீக் (2 எஸ்)

Most Read Articles

English summary
2020 Indian National Drag Racing Championship Results: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Monday, January 25, 2021, 14:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X