சீனாவில் அறிமுகமானது 2021 அப்ரில்லா ஜிபிஆர்250ஆர்!! ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக்கிற்கு போட்டி மாடல்!

சீனாவில் நடைபெற்றுவரும் 2021 ஜியான் மோட்டார் எக்ஸ்போவில் அப்ரில்லா நிறுவனம் 2021 ஜிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அப்ரில்லா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவில் அறிமுகமானது 2021 அப்ரில்லா ஜிபிஆர்250ஆர்!! ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக்கிற்கு போட்டி மாடல்!

முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட மோட்டார்சைக்கிள் இம்முறை ஏகப்பட்ட அப்டேட்களை பெற்றுள்ளது. படங்களில் இதன் கூர்மையான லைன்களை பார்க்கும்போது உங்களுக்கு அப்ரில்லாவின் பிரபலமான ஆர்.எஸ்.வி4 மோட்டார்சைக்கிள் ஞாபகத்திற்கு வரலாம்.

மேலும் இந்த 2021 அப்ரில்லா மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், விங்லெட் பாகங்கள் மற்றும் காற்று ஏற்பான்களையும் பார்க்க முடிகிறது. எக்ஸாஸ்ட் குழாய் பைக்கிற்கு அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த அப்ரில்லா பைக்கில் சிவப்பு நிற ஹைலைட்களும், அப்ரில்லா ஸ்டிக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முன் எதிர்காற்று தடுப்பு கண்ணாடி சற்று சாய்வாக வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது 2021 அப்ரில்லா ஜிபிஆர்250ஆர்!! ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக்கிற்கு போட்டி மாடல்!

செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு பதிலாக முழு-வண்ண டிஎஃப்டி திரைக்கு இந்த இத்தாலியன் தயாரிப்பு நிறுவனம் சென்றுள்ளது. 2021 அப்ரில்லா ஜிபிஆர்250ஆர் பைக்கில் வழக்கமான 250சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் 27.5 பிஎச்பி மற்றும் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது முந்தைய மாடலை காட்டிலும் சற்று அதிகமாகும்.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்-உதவி க்ளட்ச்சும் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்த அப்ரில்லா பைக்கிற்கு ஹோண்டா சிபிஆர்300ஆர் மற்றும் யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்25 போட்டியாக விளங்கவுள்ளன.

சீனாவில் அறிமுகமானது 2021 அப்ரில்லா ஜிபிஆர்250ஆர்!! ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக்கிற்கு போட்டி மாடல்!

அதேநேரம் சீன சந்தையில் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்250ஆர், சுன்ஃபெங் 250எஸ்ஆர், பெனெல்லி 302ஆர் மற்றும் க்யூஜே மோட்டார் சேஸ்350 பைக்குகளின் விற்பனை போட்டியினை எதிர்கொள்ள புதிய அப்ரில்லா ஜிபிஆர்250ஆர்-இன் விலை சீனாவில் 25,000 யுவான் (கிட்டத்தட்ட ரூ.3.10 லட்சம்) அளவில் நிர்ணயிக்கப்படவுள்ளது.

பைக்கின் நீளம் 1,970மிமீ, அகலம் 770மிமீ, உயரம் 1,150மிமீ மற்றும் வீல்பேஸ் 1,345மிமீ ஆகும். பைக்கின் மொத்த எடை 158 கிலோவாகவும், பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 14 லிட்டராகவும் உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் பெற்றுள்ள இந்த பைக்கில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ப்ரேக்கிற்கு முன் மற்றும் பின் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக்குகள், ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அப்ரில்லா ஜிபிஆர்250ஆர் பைக் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் அப்ரில்லா நிறுவனம் அதன் துணை 400சிசி மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
2021 Aprilia GPR250R Launched, Honda CBR300R & Yamaha R25 Rival.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X