கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் வாங்கும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றான பஜாஜ் பல்சர் 220எஃப் புதிய வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்த வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் வரிசை பைக்குகளில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் அப்டேட் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கூடுதலாக வாடிக்கையாளர்களை பெறலாம் என பஜாஜ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

இந்த வகையில் சமீபத்தில் பல்சர் 150 மற்றும் பல்சர் 180 பைக்குகளில் காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் கொண்டுவரப்படவுள்ள புதிய நிறத்தேர்வுகளை பார்த்திருந்தோம். புதிய நிறங்களால் இந்த பல்சர் பைக்குகள் முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாறி இருந்தன.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

அவற்றை தொடர்ந்து தற்போது புதிய நிலவின் வெள்ளை மற்றும் மேட் ப்ளாக் என்ற இரு நிறங்களில் காட்சி தரும் பல்சர் 220எஃப் பைக்கை வெளிக்காட்டும் வீடியோ ஜெட் வீல்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பல்சர் பைக்குகளின் அறிமுகங்களை விரைவில் எதிர்பார்க்கலாம். தற்சமயம் பல்சர் 220எஃப் பைக் கருப்பு-நீலம் மற்றும் கருப்பு -சிவப்பு என்ற இரு நிறத்தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மேட் ப்ளாக் நிறத்தேர்வில் கருப்பு & சிவப்பு என தற்போதைய நிறத்தேர்வில் ஒன்றில் வழங்கப்படும் நிறங்கள் தான் கொடுக்கப்படவுள்ளன. இருப்பினும் அதன் உடன் ஒப்பிடுகையில் கிராஃபிக்ஸ் புதிய மேட் ப்ளாக்கில் முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

இந்த புதிய நிறத்தேர்வின் மூலம் சிவப்பு நிறம், சிறிது பைக்கின் முன்பக்க ஹெட்லைட் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை கூறியே ஆக வேண்டும். அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் பைக்கின் என்ஜின் கௌல், முன்பக்க மட்கார்ட் மற்றும் பின்பக்க வால் பகுதியிலும் பார்க்க முடிகிறது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

முந்தைய பல்சர் பைக்குகளில் பார்த்ததை போல் இந்த பைக்கின் முன்பக்க மட்கார்ட், பக்க வாட்டு பேனல்கள், என்ஜின் கௌல் மற்றும் பின்பக்க வால்பகுதி உள்ளிட்டவற்றிலும் ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் தொடுதல் வழங்கப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

நிலவின் வெள்ளை (மூன் வொய்ட்) நிறத்தை பொறுத்தவரையில், வெள்ளை, சிவப்பு & கருப்பு என மூன்று நிறங்கள் கலந்து கொள்ளன. உண்மை சொல்ல வேண்டுமென்றால், இந்த பெயிண்ட் தேர்வில் பல்சர் 220எஃப் அட்டகாசமாக உள்ளது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

இதனால் அறிமுகத்திற்கு பிறகு வாடிக்கையாளர்களின் மத்தியில் இந்த நிறம் பிரபலமாகும் என்று நினைக்கிறோம். இருப்பினும் இந்த பெயிண்ட்டில் என்ஜின் அமைப்பு, அலாய் சக்கரங்கள் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய் உள்பட பைக்கின் கீழ் பகுதி கருப்பு நிறத்திலேயே தொடரப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

என்ஜின் பாதுகாப்பானில் மட்டும் வெள்ளை நிறத்தை பார்க்க முடிகிறது. இதனுடன் அலாய் சக்கரங்களின் ரிம்களிலும் வெள்ளை நிறம் கொடுக்கப்பட்டு இருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

கருப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கை வாங்கியது போதும்!! விரைவில் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகமாகிறது

மற்றப்படி இந்த புதிய நிறத்தேர்வுகளை பெற்றுவரும் 2021 பல்சர் 220எஃப் பைக்கின் 220சிசி, ஆயில் கூல்டு இரட்டை ஸ்பார்க், டிடிஎஸ்-ஐ ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் & ப்ரேக் அமைப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் புதிய கிராஃபிக்ஸ் மாற்றங்களினால் பைக்கின் விலை சற்று அதிகரிக்கப்பட வாய்ப்புண்டு.

Most Read Articles

English summary
2021 Bajaj Pulsar 220F New Colours, Moon White, Matte Black.
Story first published: Wednesday, March 24, 2021, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X