2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் 2021 எஸ் 1000 ஆர் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 17.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த பைக்கிற்கான முன்பதிவு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

வேரியண்ட்கள் மற்றும் விலை

மூன்று வேரியண்ட்கள்: ஸ்டாண்டர்டு, ப்ரோ மற்றும் எம் ஸ்போர்ட்

ஸ்டாண்டர்டு-17.90 லட்ச ரூபாய்

ஸ்போர்ட்-19.75 லட்ச ரூபாய்

எம் ஸ்போர்ட்-22.50 லட்ச ரூபாய்

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இன்ஜின்

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்கில், இன்-லைன் நான்கு சிலிண்டர் 998 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்லிப் மற்றும் அலிஸ்ட் கிளட்ச் வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலின் இன்ஜின் 5 கிலோ எடை குறைவானது.

2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
  • பவர்: 162 பிஎச்பி 11,000 ஆர்பிஎம்
  • டார்க்: 114 என்எம் 9,250 ஆர்பிஎம்
  • பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை எட்ட 3.2 வினாடிகள் மட்டுமே ஆகும்.
  • டாப் ஸ்பீடு-மணிக்கு 250 கிலோ மீட்டர்கள்
  • இந்த மோட்டார்சைக்கிளில் 4வது, 5வது மற்றும் 6வது கியர் ரேஷியோக்களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் குறைவான ஆர்பிஎம்மிலேயே அதிக பவர் கிடைப்பதுடன், ஆக்ஸலரேஷனும் சிறப்பாக இருக்கும்.

    2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

    டிசைன் மாற்றங்கள்

    இந்த பைக்கின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக முன் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி முன் பகுதியில் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல் உடன் புதிய ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் டேங்க், எக்ஸாஸ்ட் மற்றும் பின் பகுதியிலும் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

    ஃப்ரேம், சஸ்பென்ஸன் மற்றும் பிரேக்

    ஆர்ஆர் வேரியண்ட்டின் ஃப்ரேம் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைக் இலகுவாக இருப்பதுடன், கையாளுமையும் சிறப்பாக இருக்கும். சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், இந்த பைக்கின் முன் பகுதியில் 45 மிமீ யூஎஸ்டி போர்க்குகளும், பின் பகுதியில் மோனோ ஷாக் செட்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

    2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

    பிரேக்குகளை பொறுத்தவரை, முன்பகுதியில் ட்யூயல் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் சிங்கிள் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 120/70 செக்ஸன் டயருடன் 17 இன்ச் வீலும், பின் பகுதியில் 190/55 செக்ஸன் டயருடன் 17 இன்ச் வீலும் இடம்பெற்றுள்ளன.

    2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

    இந்த பைக்கின் எடை 199 கிலோ ஆகும். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் 6.5 கிலோ இலகுவானது. இந்த பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 6.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில், ரெயின், ரோடு, டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என மொத்தம் 4 ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 உள்ளிட்ட பைக்குகள் உடன் பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 15, 2021, 13:38 [IST]
English summary
2021 BMW S 1000 R Launched In India: Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+