அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா? அப்படி என்னங்க அதுல இருக்கு! இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே

மிக மிக அதிக விலைக் கொண்ட பைக்கை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அப்பைக்குறித்த முக்கியமான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

உலக புகழ்பெற்ற பைக் உற்பத்தி நிறுவனமான கவாஸாகி புதுமுக மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 நிஞ்ஜா எச்2ஆர் பைக்கையே நிறுவனம் புதிதாக இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய 2021 நிஞ்ஜா எச்2ஆர் பைக்குறித்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், பைக்கின் விலைகுறித்த தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுவே பலருக்கு ஷாக்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

கவாஸாகி நிஞ்ஜா எச்2ஆர் பைக்கிற்கு ரூ. 79.90 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக இப்பைக் ரூ. 75.80 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

இந்த உச்சபட்ச விலையே வாகன ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட இந்த விலைக்கு ஒரு சொகுசு காரையே நாங்க வாங்கிடுவோமே என நெட்டிசன்களை இந்த விலை புலம்ப வைத்திருக்கின்றது. பைக்கின் விலை மட்டுமே உயர்வு செய்யப்பட்டிருக்கின்றதே தவிர பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

ஆகையால், கடந்த வருடம் என்ன வெளிப்புற தோற்றத்தில் கவாஸாகி நிஞ்ஜா எச்2ஆர் பைக் தென்பட்டதோ அதே ஸ்டைலுடனே 2021 மாடலும் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணாடிகளுக்கு மேட் ரக கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. இதே நிறத்தில்தான் முந்தைய மாடல் நிஞ்ஜா எச்2ஆர் பைக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

நிஞ்ஜா எச்2ஆர் பைக்கில் 998சிசி திறன் கொண்ட இன்லைன் 4சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 305.7 பிஎச்பி மற்றும் 165 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இந்த எஞ்ஜின் இயங்குகின்றது.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக 43 மிமீ அளவுள்ள அப்சைடு டவுன் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஓஹ்லின்ஸ் டிடிஎக்ஸ்36 கேஸ்-சார்ஜட் மேனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 330மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 250 மிமீ அளவுள்ள டிஸ்க் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

அடேங்கப்பா இந்த பைக்கோட விலை 80 லட்ச ரூபா?.. அப்படி என்னங்க அதுல இருக்கு... இந்த விலைல ஒரு பென்ஸ் காரையே வாங்கலாமே!!

இப்பைக்கின் ஒட்டுமொத்த எடையே 216கிலோவாகும். இது ஓர் மிக சிறந்த ஃபெர்பார்மென்ஸ் பைக்காகும். இதற்கேற்ப பல்வேறு சிறப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிஞ்ஜா எச்2ஆர் பைக் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், போஸ் நிறுவனத்தின் இனர்டியல் மெசர்மெண்ட் யூனிட் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Ninja H2R Launched In India At Rs. 79.90 lakh. Read In Tamil.
Story first published: Saturday, June 5, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X