கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

2021 கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் மோட்டார்சைக்கிள் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கவாஸாகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக கவாஸாகி இசட்.எக்ஸ்-14ஆர் பைக் புதிய கிராஃபிக்ஸ் உடன் புதிய பெயிண்ட்டை பெற்றுள்ளது. மற்றப்படி இதன் என்ஜின் உள்பட இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

இசட்.எக்ஸ் வரிசையில் இது தான் கடைசி மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கவாஸாகி நிறுவனம் சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டியாக எச்2 என்ற சூப்பர்சார்ஜ்டு மோட்டார்சைக்கிள்களை கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டியாக கவாஸாகி நிறுவனம் நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் 2006ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்டப்பட்ட சமயத்தில் மிகவும் ஆற்றல்மிக்க தயாரிப்பு மோட்டார்சைக்கிளாக கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பார்க்கப்பட்டது.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

இப்போதும் மிக பெரிய என்ஜின் கொண்ட சூப்பர்ஸ்போர்ட் அல்லது ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிள் என்று எடுத்து பார்த்தால், அதில் நிச்சயம் இந்த கவாஸாகி பைக்கும் ஒன்றாக இருக்கும். ஏற்கனவே கூறியதுதான் 2021 கவாஸாகி இசட்.எக்ஸ்-14ஆர் பைக்கில் மிக பெரிய மாற்றமாக புதிய நிறத்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

பேர்ல் ஸ்ட்ரோம் க்ரே/மெட்டாலிக் டயப்லோ ப்ளாக் என்ற இந்த சூப்பர் பைக்கிற்கான புதிய பெயிண்ட்டில் மெட்டாலிக் கருப்பு நிறம் தான் பைக்கின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அதேநேரம் பைக்கை சுற்றிலும் சிவப்பு நிற ஹைலைட்களையும் பார்க்க முடிகிறது.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் மோட்டார்சைக்கிளில் 1,441சிசி இன்லைன்-4-சிலிண்டர் என்ஜினை கவாஸாகி நிறுவனம் பொருத்துகிறது. இந்த என்ஜின் கிட்டத்தட்ட 197.2 பிஎச்பி மற்றும் 153.5 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

என்ஜினின் ஆற்றல் பைக்கின் பின் சக்கரத்திற்கு செல்ல 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த என்ஜின் இன்னமும் யுரோ5/ பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படவில்லை. அதேபோல் எலக்ட்ரானிக் தொகுப்புகளும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

இதன் எலக்ட்ரானிக் தொகுப்பில் இரு ரைடிங் மோட்கள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. கடைசி இசட்.எக்ஸ்-14ஆர் மோட்டார்சைக்கிள் என்பதால் பைக்கின் தோற்றத்தில் முற்றிலுமாக கவாஸாகி கை வைக்கவில்லை.

மிக பெரிய அப்டேட்டை இந்த கவாஸாகி சூப்பர்ஸ்போர்ட் பைக் கடைசியாக 2012ல் பெற்றிருந்தது.

கவாஸாகியின் கடைசி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் பைக் வெளியீடு!! சுஸுகி ஹயபுஸாவிற்கு போட்டி மாடல்!

அப்படியென்றால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த பைக் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே உள்ளது. ஏனெனில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின்களில் இருந்து காலம், கட்டாயப்படுத்தப்பட்டு அளவில் சிறியதாக்கப்பட்ட என்ஜின்களின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
This Could Be The Last Motorcycle Of Its Kind. 2021 Kawasaki Ninja ZX-14R Revealed.
Story first published: Saturday, June 5, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X