டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் நேற்று (செப்டம்பர் 1) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய மாடலை காட்டிலும், அனைத்து அம்சங்களிலும் மேம்பட்ட வகையில், கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

இந்த சூழலில், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. சட்டீஸ்கரில் உள்ள ஒரு டீலர்ஷிப்பில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் நிற்கும் படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

டீலர்ஷிப்களுக்கு பைக்குகள் வர தொடங்கியுள்ள நிலையில், டெலிவரி பணிகளும் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் புத்தம் புதிய சேஸிஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், புதிய இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பழைய ரெட்ரோ லுக் தக்க வைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ லுக் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது. நாங்கள் இந்த பைக்கை ஏற்கனவே டெஸ்ட் ரைடு செய்து விட்டோம். அதன் அடிப்படையில்தான் இதனை கூறுகிறோம். பழைய மாடலில் அதிர்வுகள் அதிகமாக இருக்கும். ஆனால் புதிய தலைமுறை மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதிர்வுகளை வெகுவாக குறைத்துள்ளது.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

அத்துடன் ராயல் என்பீல்டு ரசிகர்கள் அதிகம் விரும்பும் எக்ஸாஸ்ட் சத்தமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. இத்தனைக்கும் புதிய தலைமுறை மாடலின் வருகைக்காக பலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்குவதை தள்ளி போட்டு கொண்டே வந்தனர்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

எனவே வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிக சிறப்பாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், வாடிக்கையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இது அனைவரையும் கவரும் விஷயமாக இருக்கும்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸை ராயல் என்பீல்டு நிறுவனம் இணைத்துள்ளது.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

அதே சமயம் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், நிறைய வண்ண தேர்வுகளில் கிடைக்கும். இதன்படி ரெட்டிச் க்ரீன், ரெட்டிச் க்ரே, ஹால்சியான் க்ரீன், ஹால்சியன் பிளாக், ஹால்சியான் க்ரே, சிக்னல்ஸ் மார்ஷ் க்ரே, சிக்னல்ஸ் சேண்ட்ஸ்ட்ரோம், டார்க் கன்மெட்டல் க்ரே, டார்க் ஸ்டீல்த் பிளாக், க்ரோம் ப்ரோன்ஸ் மற்றும் க்ரோம் ரெட் ஆகிய வண்ண தேர்வுகளில் இந்த பைக் கிடைக்கும்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

அதே நேரத்தில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் தேர்வுகளில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

அதே சமயம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Make It Yours திட்டத்தின் கீழ், புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளவும் முடியும். ராயல் என்பீல்டு பைக்குகள் கஸ்டமைஸ் செய்வதற்கு மிகவும் ஏற்றவை என்பதால், இதுவும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

டீலர்ஷிப்களில் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்... நீண்ட நாட்களாக காத்து கிடந்த ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் ஜாவா பைக்குகளுக்கு, புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விற்பனையில் தொடர்ந்து கடுமையான சவாலை வழங்கவுள்ளது. தற்போதைய நிலையில், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்பதை பைக் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Most Read Articles

English summary
2021 royal enfield classic 350 arrives at dealer exclusive pictures
Story first published: Thursday, September 2, 2021, 18:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X