சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

மூன்றாவது தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முதல் பேட்ஜ் வெறும் மூன்றே நாட்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிலும் குறிப்பாக பேர்ல் பிர்லியண்ட் ஒயிட்/மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ வண்ண தேர்வில் அனைத்து யூனிட்களும் வெறும் ஒரே நாளில் விற்பனையாகி விட்டன.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளதால், இரண்டாவது பேட்ஜ் ஹயபுசா பைக்குகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கு சுஸுகி நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது. அத்துடன் புதிய ஹயபுசா பைக்கிற்கான முன்பதிவுகளை நாளை முதல் (ஜூலை 1) மீண்டும் ஏற்க தொடங்கவும் சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இரண்டாவது பேட்ஜ் பைக்குகளும் ஒரு சில நாட்களிலேயே விற்பனையாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக்கின் விலை 16.40 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும் என்னும் நிலையிலும், இவ்வளவு விலை கொடுத்து பலர் ஆர்வத்துடன் புதிய சுஸுகி ஹயபுசா பைக்கை வாங்கி வருகின்றனர். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் செயல்திறன் உள்பட அத்தனை அம்சங்களிலும், மூன்றாவது தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் மேம்பட்டுள்ளது.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

மூன்றாவது தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக்கில் 1,304 சிசி, நான்கு-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இரண்டாவது தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில் பவர் அவுட் சற்றே குறைவுதான். என்றாலும் புதிய ஹயபுசா மிகவும் வேகமானது.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

அதே சமயம் புதிய சுஸுகி ஹயபுசா மோட்டார்சைக்கிளில், ஆக்டிவ் ஸ்பீடு லிமிட்டர் உடன் க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆன்டி-லிஃப்ட் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் 6 ரைடிங் மோடுகள் உள்பட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புதிய சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு மீண்டும் முன்பதிவு தொடங்கப்படவுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு நாளை முதல் மீண்டும் முன்பதிவு... விலையை கேட்டால் மயக்கமே போட்றுவீங்க!

ஆனால் முன்பதிவு தொகையாக குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும். முதல் பேட்ஜ் போல், இரண்டாவது பேட்ஜ் சுஸுகி ஹயபுசா பைக்குகளும் உடனடியாக விற்பனையாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால், புதிய சுஸுகி ஹயபுசா பைக்கை உடனடியாக முன்பதிவு செய்து விடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 30, 2021, 17:45 [IST]
English summary
2021 Suzuki Hayabusa Bookings To Reopen Tomorrow: Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+