இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2021 ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இப்பைக்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனமான 2021 ஹயபுசா பைக்கை மீண்டும் இந்தியா இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சிகேடி வாயிலாகவே இப்பைக் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

ரூ. 16.40 லட்சம் என்ற உச்சபட்ச விலையை இந்த சூப்பர் பைக்கிற்கு சுசுகி மோட்டார்சைக்கிள் நிர்ணயித்துள்ளது. நீண்ட நாட்களாக ஹயபுசா பைக் எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், இன்று (ஏப்ரல் 26) ஹயபுசா இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் முழு முடக்கத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்ற சுசுகி நிறுவனம் இந்த விலையுயர்ந்த சூப்பர் பைக்கை மிக அதிக நம்பிக்கையுடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பல்வேறு புதுப்பித்தல்களுடன் நடப்பாண்டின் தொடக்கத்தில் இப்பைக்கை உலக அளவில் சுசுகி அறிமுகம் செய்திருந்தது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

ஆனால், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்னரே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுசுகி ஹயபுசா பைக்கில் 1,340 சிசி திறன் கொண்ட இன்லைன்-4 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

இது அதிகபட்சமாக 190எச்பி மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறனானது பழைய மாடல் ஹயபுசாவைக் காட்டிலும் சற்று குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜினில் எடைக் குறைந்த பிஸ்டன்கள் மற்றும் இணைப்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இதில், எலெக்ட்ரானிக் எய்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 6 ஆக்சிஸ் ஐஎம்யு அடிப்படையிலான டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, வீலி கன்ட்ரோல், எஞ்ஜின் பிரேக் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் மூன்று விதமான பவர் மோட்கள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் 2021 ஹயபுசா பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

மேலும், புத்தம் புதிய ஹயபுசா பைக்கில் இரு விதமான குயிக் ஷிஃப்டர் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை ஹயபுசா பைக்கை ஓட்டுவதை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்ற உதவும். ஆகையால், ரைடரால் ஒவ்வொரு ரைடையும் மிக அலாதியானதாக அனுபவிக்க முடியும்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... இதோட விலை கேட்ட மயக்கமே வந்துவிடும்!!

தொடர்ந்து சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சிறிய டிஜிட்டல் டிஎஃப்டி ரீட்அவுட் சென்டர் போன்றவை 2021 ஹயபுசா பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இவை பல்வேறு தகவல்களை ரைடர்களுக்கு வழங்க உதவும்.

Most Read Articles

English summary
2021 Suzuki Hayabusa Launched In India At Rs. 16.40 Lakh: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X