இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

2021 Suzuki Hayabusa Second Batch Sold Out In An Hour | 2021 சுசுகி ஹயபுசா பைக்கின் இரண்டாம் பேட்ச் விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி, அதன் 2021 ஹயபுசா பைக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை சிறிய சிறிய அளவிலேயே (கணிசமான எண்ணிக்கையில்) சுசுகி விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

அதாவது, நூறு நூறூ யூனிட்டுகளாக விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், முதல் பேட்சில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட சுசுகி ஹயபுசா பைக்குகள், புக்கிங் தொடங்கப்பட்ட இரு நாட்களுக்கு உள்ளாகவே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய இருசக்கர வாகன சந்தையையே மிரட்டும் வகையில் அமைந்திருந்தது. கோவிட்-19 வைரஸ் இரண்டாம் அலை பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் இத்தகைய விற்பனை வரவேற்பை சுசுகி ஹயபுசா பெற்றிருந்தது. எனவேதான் அனைவரும் ஆச்சரியத்திற்குள்ளாகி இருந்தனர்.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

இந்த நிலையில், சுசுகி ஹயபுசா குறித்த மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அண்மையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட இரண்டாம் பேட்ச் சுசுகி ஹயபுசா பைக்கின் அனைத்து யூனிட்டுகளும் அதிரடியாக குறுகிய நேரத்தில் விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

ஜூலை 1ம் தேதி அன்றே இரண்டாம் பேட்ச் ஹயபுசா பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது. இம்முறை 100 அலகுகள் ஹயபுசா பைக்குகளுக்கான முன் பதிவு தொடங்கப்பட்டது. இது தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அனைத்து யூனிட்டுகளுக்குமான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

நூறு யூனிட்டுக்காக நடைபெற்ற புக்கிங்கில் பலர் பங்கேற்றதாக கூறப்படுகின்றது. ஆனால், நூறு பேரால் மட்டுமே பைக்கை புக் செய்ய முடிந்திருந்கின்றது. 2021 சுசுகி ஹயபுசா பைக் ரூ. 16.4 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

இந்த உச்சபட்ச விலைக் கொண்ட பைக்கையே இந்தியர்கள் போட்டி போட்டு வாங்கியிருக்கின்றனர். இப்பைக்கில், 1,340சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக், ப்யூவல் இன்ஜெக்டர், லிக்யூடு கூல்டு, டிஓஎச்சி, இன்லைன் 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மத்தியில் இவ்ளோ பெரிய வரவேற்பா! ஒரு மணி நேரத்துல விற்று தீர்ந்த 16 லட்ச ரூபா பைக்!

இது அதிகபட்சமாக 187 பிஎச்பியை 9,700 ஆர்பிஎம்மிலும், 150 என்எம் டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிமீ வேகம் ஆகும். இந்த பைக் உலக நாடுகளில் 264 கிலோகிராம் எடையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் புடவை பாதுகாப்பு மற்றும் நம்பர் பிளேட்ட ஆகியவற்றால் 2 கிலோ அதிகரிப்புடன் 266கிலோவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
2021 Suzuki Hayabusa Second Batch Sold Out In An Hour. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X