2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இளைஞர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் நிறத்தேர்வுகளை குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அப்டேட் செய்யப்பட்ட ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையினால் அப்போது முடியாமல் போனது.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

கடந்த ஆண்டிலும் இதேபோன்று டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டது. ஆனால் அதனை காட்டிலும் தற்போது மெக்கானிக்கல், காஸ்மெட்டிக் என வெவ்வேறான வகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதியதாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளின் விலை ரூ.2,59,990ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இது எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். இந்த பைக்கை வெவ்வேறான நிறங்களில் வாடிக்கையாளரே தனது விருப்பத்திற்கு ஏற்ப பெயிண்ட் செய்து கொள்ளலாம். இதற்காகவே சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் ‘டிவிஎஸ் கட்டளைக்கு கட்டப்பட்டது' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்களது அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ்ட் செய்துகொள்ள சில நிறத்தேர்வுகளும், ஆக்ஸஸரீகளும் வழங்கப்படுகின்றன. பைக் மட்டுமில்லாமல் பைக்கின் அலாய் சக்கரங்களையும் கூட வாடிக்கையாளர் தங்களுக்கு பிடித்த நிறத்தில் தேர்வு செய்யலாம்.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கான முன்பதிவுகளும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில், அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை தேர்வு செய்து புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை முன்பதிவு செய்யலாம். இந்த அப்பாச்சி பைக்கிற்கு புதிய நிறத்தேர்வாக பந்தய பைக்குகளை போன்ற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Component Price
Dynamic Kit ₹12,000
Race Kit ₹5,000
Race Replica Graphics ₹4,500
Red Alloy Wheel ₹1,500
2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இவற்றுடன் பைக்கின் முன் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்புகளும் ரைடரின் ரைடிங் ஸ்டைலிற்கு ஏற்ப முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு டைனாமிக் தொகுப்பு மற்றும் ஒரு ரேஸ் தொகுப்பு என இரு செயல்திறன் தொகுப்புகளுடன் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இதில் டைனாமிக் தொகுப்பில் மேற்கூறப்பட்ட அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் பாகங்களும் (முன்பக்கத்தில் KYB ஃபோர்க், பின்பக்கத்தில் மோனோஷாக்), எளிதில் துருப்பிடிக்காத வகையில் கோட்டிங் செய்யப்பட்ட இயக்க சங்கிலியும் அடங்குகின்றன. ரேஸ் தொகுப்பில், பெயருக்கு ஏற்ப மோட்டார்சைக்கிளை பந்தய களத்திற்கு தயார்படுத்தும் விதமாக சற்று கீழ்நோக்கி தாழ்த்தப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இதனால் ரேஸ் தொகுப்பினை பைக்கில் பொருத்துவதன் மூலம் மோட்டார்சைக்கிள் காற்று இயக்கவியலுக்கு மேலும் இணக்கமானதாக மாறிவிடும். மேலும், இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்கில், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை சேமித்து வைத்து கொள்ள டிஜிட்டல் ஆவணங்கள் வசதி வழங்கப்பட்டுள்ளது.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

அத்துடன் டைனாமிக் என்ஜின் ரிவர்ஸ் எல்லை இண்டிகேட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்ஜினின் நிலைக்கு (வெப்பம் அல்லது குளிர்) ஏற்ப என்ஜினின் வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை ஓட்டுனர் அறிய அனுமதிக்கிறது. இதனால் என்ஜினின் ஆயுட்காலம் மேம்படும்.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இவற்றை வழங்கும் பைக்கின் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் பகல்நேர பயண அளவீடு மற்றும் அதிவேகத்தை எச்சரிக்கும் வகையிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளில் பொருத்தப்படும் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

டிவிஎஸ் மோட்டாரின் முதன்மையான அப்பாச்சி மோட்டார்சைக்கிள் மாடலான இதில் 310சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஜி310 இரட்டை பைக்குகளிலும் பொருத்தப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 34 எச்பி மற்றும் 27.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2.59 லட்சம்

இந்திய சந்தையில் இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு விற்பனையில் கேடிஎம் ஆர்சி200, பஜாஜ் டோமினார் 400 மற்றும் கவாஸாகி நிஞ்சா 300 உள்ளிட்டவை முக்கிய போட்டிகளாக உள்ளன. இதில் ஆர்ஆர்310 பைக்குடன் நேரடியாக மோதும் கவாஸாகி நிஞ்சா 300 பைக்கின் விலை ரூ.3.55 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, August 30, 2021, 20:34 [IST]
English summary
TVS Apache RR 310 Launched.
மேலும்... #டிவிஎஸ் #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+