தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

புத்துணர்ச்சியான தோற்றத்துடன் 2021 யமஹா எம்டி-15 பைக் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2021 யமஹா பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

யமஹாவின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் மாடலான எம்டி-15 2021ஆம் ஆண்டிற்கான முக்கியமான அப்கிரேடாக புதிய நிறத்தேர்வுகளை ஏற்றுள்ளது. இந்த புதிய நிறத்தேர்வுகளில் ஒன்றான ரேசிங் நீல நிறத்தில் பெட்ரோல் டேங்க் மற்றும் சக்கரங்கள் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

அதேநேரம் இந்த பெயிண்ட் தேர்வில் டேங்க் கவசங்கள், ஹெட்லேம்ப் கௌல் மற்றும் முன்பக்க ஃபெண்டர் உள்ளிட்டவை லைட் க்ரே நிறத்தில் வழங்கப்படும். மற்றொரு நிறத்தேர்வான மெட்டாலிக் கருப்பு பெயிண்ட்டில் அதன் பெயருக்கு ஏற்றாற்போல் பைக் முழுவதும் கருப்பு நிறத்திலும், பெட்ரோல் டேங்கில் வழங்கப்படும் கிராஃபிக்ஸை மட்டும் சில்வர் நிறத்தில் பெறலாம்.

தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

எம்டி-15 பைக்கிற்கு புதியதாக சேர்க்கப்பட்டுள்ள இன்னொரு நிறத்தேர்வான மெட்டாலிக் க்ரே-வில் நீல நிற கிராஃபிக்ஸ் உடன் பைக் க்ரே நிறத்திலும், சக்கரங்கள் சிவப்பு நிறத்திலும் வழங்கப்படும். மற்ற இரு பெயிண்ட் தேர்வுகளை காட்டிலும் இந்த பெயிண்ட்டில் தான் பைக் மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் உள்ளது என்பது எனது கருத்து.

தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

புதிய நிறத்தேர்வுகளை தவிர்த்து மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை. இந்தியாவில் விற்பனையில் உள்ள யமஹா எம்டி-15 பைக்கில் வழங்கப்படும் 155சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 18.5 பிஎச்பி மற்றும் 14.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

ஸ்லிப்பர் மற்றும் உதவி க்ளட்ச் உடன் இந்த என்ஜின் அமைப்பில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றுடன் தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபோர்க் பாட்டில்கள் மற்றும் அலுமினிய ஸ்விங்கார்ம் உடன் தலைக்கீழான ஃபோர்க்குகள் என ப்ரீமியம் தரத்திலான பாகங்கள் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்டி-15 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் அறிமுகமானது 2021 யமஹா எம்டி-15!! கவர்ச்சிகரமான மூன்று புதிய நிறங்கள் சேர்ப்பு!

தாய்லாந்தை தொடர்ந்து இந்த புதிய நிறத்தேர்வுகளுடன் 2021 எம்டி-15 பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் இதன் விற்பனைக்கு கேடிஎம் 125 ட்யூக் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்குகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 23, 2021, 8:30 [IST]
English summary
2021 Yamaha MT-15 unveiled! Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+