Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Yamaha R15 M பைக்கின் பிரத்யேகமான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

இந்தியாவில் YZF-R15 மோட்டார்சைக்கிளின் பலத்தை மேலும் கூட்டும் விதமாக புதிய R15 M மோட்டார்சைக்கிளை கொண்டுவர Yamaha தயாராகி வருகிறது. விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னபாக சில டீலர்ஷிப் மையங்களில் R15 M பைக்கை முன்னிலைப்படுத்தி சில நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

Image Source: RevNitro

இதற்காக சில குறிப்பிட்ட டீலர்ஷிப் மையங்களை வந்தடைந்துள்ள இந்த புதிய R15 பைக்கின் ஸ்பை படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளன. இந்த ஸ்பை படங்கள் அனைத்தும் RevNitro என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது நம்மால் தோற்றத்தில் வழக்கமான R15 பைக்கிற்கும் புதிய R15 M-க்கும் உள்ள வித்தியாசத்தை எளிதாக அடையாளம் காண முடிகிறது.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

குறிப்பாக ஹெட்லைட் பகுதி கவனிக்கத்தக்க விதத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களினால் இந்த R15 M பைக்கின் முன்பக்கம் நமக்கு MT-15 பைக்கையும், FZ-25 பைக்கையும் ஞாபகப்படுத்துகிறது. இது பைக்கிற்கு ஸ்டைலிஷான தோற்றத்தை வழங்குவது மட்டுமின்றி பைக்கின் ஹேண்ட்லிங்கையும் மேம்படுத்தும்.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

அதேபோல் முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகளும் தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் பக்கவாட்டில் பெரும்பான்மையான பாகங்கள் ஸ்டாண்டர்ட் R15 பைக்கையே ஒத்து இருக்கின்றன. இருப்பினும் எக்ஸாஸ்ட் குழாய் சற்று பருத்த வடிவில் உள்ளது. அத்துடன் மெட்டாலிக் ஃபினிஷில் கூடுதல் பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

இவை தவிர்த்து இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கின் மூலம் Yamaha நிறுவனம் ஏதாவது புதிய தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது தற்போதைய மாடர்ன் மோட்டார்சைக்கிள்களுக்கு ஏற்ப ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் கொண்டுவரப்படலாம்.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

ஆனால் இதனை பற்றியெல்லாம் Yamaha நிறுவனம் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. வழக்கமான Yamaha YZF-R15 பைக்கில் 4-ஸ்ட்ரோக், SOHC, 4-வால்வு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.6 பிஎஸ் மற்றும் 8500 ஆர்பிஎம்-இல் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

இதனுடன் slick-shifting constant-mesh 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. Yamaha YZF-R15 பைக்கின் செயல்திறன்மிக்க வெர்சனாக புதிய M எடிசன் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், இதில் சிறிது கூடுதல் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் என்ஜின் வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்ப்பீர்கள், நாங்களும் அவ்வாறு தான் நினைத்தோம்.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

ஆனால் சான்றிதழ் ஒன்றில், இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 13.5 கிலோவாட்ஸ் (18.35 பிஎஸ்) ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்த்தால், தற்போதைய R15 பைக்கை காட்டிலும் குறைந்த ஆற்றல் கொண்டதாக புதிய R15 M விளங்கவுள்ளது.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

இந்த வசதிகளுடன், ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் மற்றும் வெவ்வேறான வால்வு செயல்பாடு போன்ற சில அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்கக்கூடிய வசதிகளையும் சேர்க்க Yamaha திட்டமிட்டுள்ளது. இவ்வாறான தொழிற்நுட்பங்கள் R15 M பைக்கில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

இவ்வாறான தொழிற்நுட்பங்களை தவிர்த்து, பரிமாண அளவுகளில் வழக்கமான R15 பைக்கையே R15 M வெர்சனும் ஒத்திருக்கும். தற்போதைய Yamaha R15 பைக்கின் நீளம் 1,990மிமீ ஆகவும், அகலம் 725மிமீ ஆகவும், உயரம் 1,135மிமீ ஆகவும் உள்ளன. இவற்றில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

முன்பக்க சஸ்பென்ஷன் இவை இரண்டிலும் வித்தியாசப்பட்டாலும், சக்கரங்களுக்கு இடையேயான தூரம் வேறுப்படாது. R15 பைக்கின் வீல்பேஸ் அளவு 1,325மிமீ ஆகும். Yamaha YZF-R15 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.56 லட்சமாக உள்ளது. இது சற்று அதிகம் தான்.

Yamaha R15 M பைக்கின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன!! ஸ்பை படங்கள் லீக்!

இருந்தாலும், R15 போன்று ட்ராக்-பைக் அனுபவத்தை தரக்கூடிய வேறெந்த பைக்கும் இத்தகைய குறைவான விலையில் இல்லை. இதுவே இந்திய இளம் தலைமுறையினரை இந்த Yamaha ஸ்போர்ட்ஸ் பைக்கின் பக்கம் இழுக்கிறது. ஆதலால் R15 M பைக்கும் நிச்சயம் பெரிய வெற்றியடையும் என நம்புகிறோம். இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 27, 2021, 20:39 [IST]
English summary
Yamaha R15M Details Leaked Ahead Of India Launch Here Is How The New Motorcycle Looks.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+