புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

இந்திய சந்தையில் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்யும் ஆர்சி மோட்டார்சைக்கிள்களான ஆர்சி125, ஆர்சி200 மற்றும் ஆர்சி390-இன் புதிய தலைமுறையின் விபரங்கள் இணையத்தில் படங்களுடன் கசிந்துள்ளன.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

கேடிஎம் நிறுவனம் அதன் ஆர்சி வரிசை மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதில் முதலாவதாக புதிய ஆர்சி390 புதுமையான தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தவறுதலாக புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கின் படங்கள் நேரலை பகுதியில் பதிவிடப்பட்டன. இதனை கண்டறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அந்த பதிவுகளை நீக்கினர். இருப்பினும் அதற்குள்ளாக நெட்டிசன்களால் சேமிக்கப்பட்ட படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ளன.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

இந்த படங்களில் நீலம் மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் காட்சியளிக்கும் புதிய ஆர்சி390 பைக்கில், 390 ட்யூக் மாடலை போன்று ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்சமயம் விற்பனையில் கேடிஎம் ஆர்சி390 பைக்கில் இரட்டை ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

அதேபோல் பெட்ரோல் டேங்க்கும் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. தற்போதைய ஆர்சி390-இல் 9.5 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. ஹேண்டில்பார் சற்று உயரமாகவும், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி சற்று முன்னோக்கி வழங்கப்பட்டுள்ளதினாலும் புதிய ஆர்சி390-இல் பயணம் அனுபவம் நிச்சயம் மேம்பட்டிருக்கும் என்பது உறுதி.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகளை பொறுத்தவரையில், இவை இரண்டும் துணை-ஃப்ரேம் உடன் புதிய சேசிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முந்தைய மாடலை காட்டிலும் நன்கு பெரிய அலங்கரிப்பு பேனல்களை இவை பெற்றுவரவுள்ளன.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கை போல் புதிய ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகளிலும் ரீ-டிசைனில் ஒற்றை துண்டாக ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்சி390-இல் எல்இடி விளக்குகளும், ஆர்சி125 & ஆர்சி200 பைக்குகளில் ஹலோஜன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

இதனுடன் புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் பெரிய முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடிகளையும் இவை பெற்றுள்ளன. மேலும் இவற்றிலும், படிக்கட்டு போன்றதான இருக்கை அமைப்புடன், சற்று பருத்த வடிவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

இந்த லீக் படங்களில் புதிய ஆர்சி200 பைக்கிலும், ஆர்390-இல் உள்ளதை போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பார்க்க முடிகிறது. புதிய ஆர்சி125 பைக்கில் இத்தகைய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

புதிய ஆர்சி200 பைக்கில் சற்று தாழ்வான ஹேண்டில்பார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர் சற்று குனிந்தப்படியே பைக்கை ஓட்ட வேண்டியதாக இருக்கும். 2022 ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகள் ஆரஞ்ச் உடன் கருப்பு மற்றும் ஆரஞ்ச் உடன் வெள்ளை என்ற இரு நிறங்களில் இந்த படங்களில் காட்சியளிக்கின்றன.

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளின் விபரங்கள் இணையத்தில் லீக்!! ஆரஞ்ச், கருப்பு நிறத்தில் உருவாகின்றன

நீலம்/ ஆரஞ்ச் நிறத்தேர்வு புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த மூன்று புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளும் இந்த ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள்ளாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 2, 2021, 11:57 [IST]
English summary
2022 KTM RC390, RC200 & RC125 Photos Leak Via Official Website Ahead Of Debut.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+