ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

இந்தியாவில் சமீப காலமாக இரு சக்கர வாகனங்களின் விலை உயர்ந்து வருகிறது. அத்துடன் இந்தியாவில் பெட்ரோல் விலையும் மிகவும் அதிகமாக இருப்பதால் விலை குறைவான இரு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்கள் பலர் தேடி வருகின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்காகதான் இந்த பதிவு.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

இந்த செய்தியில் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான புதிய இரு சக்கர வாகனங்கள் பற்றிய விபரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் மிகவும் குறைவான விலையில் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

பஜாஜ் சிடி100 (Bajaj CT100)

கிக் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என பஜாஜ் சிடி100 பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், கிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 47,654 ரூபாய் ஆகவும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 51,802 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 102 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.9 பிஎஸ் பவரையும், 8.34 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பஜாஜ் சிடி100 மோட்டார்சைக்கிள் மிகவும் பிரபலமான ஒரு மாடலாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை சிடி100 பதிவு செய்து வருகிறது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe)

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் லைன்அப்பில் மிகவும் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக ஹெச்எஃப் டீலக்ஸ் உள்ளது. ஸ்போக் வீல்கள் உடன் கிக் ஸ்டார்ட், அலாய் வீல்கள் உடன் கிக் ஸ்டார்ட், செல்ஃப் ஸ்டார்ட், ஐ3எஸ் உடன் செல்ஃப் ஸ்டார்ட் என ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் விலை 50,200 ரூபாய் ஆகும். அதே சமயம் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 61,225 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 8.02 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 97.2 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100)

பஜாஜ் சிடி 100 உடன் ஒப்பிடும்போது ஸ்டைலான கிராபிக்ஸ் மற்றும் ஒரு சில கூடுதல் வசதிகளுடன் பஜாஜ் பிளாட்டினா 100 சற்றே மேம்பட்ட மாடலாக உள்ளது. கிக் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் முன் பகுதியில் டிஸ்க் பிரேக் உடன் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் பஜாஜ் பிளாட்டினா 100 கிடைக்கிறது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

இந்த பைக்கின் ஆரம்ப விலை 52,166 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 63,578 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 7.9 பிஎஸ் பவரையும், 8.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 102 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport)

கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என டிவிஎஸ் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், கிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 56,100 ரூபாய் ஆகவும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 62,950 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 109.7 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.29 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஒவ்வொரு மாதமும் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டிவிஎஸ் நிறுவனத்திற்கு தேடி தந்து கொண்டுள்ளது.

(இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்)

Most Read Articles

English summary
Affordable Bikes In India- Bajaj CT100, Hero HF Deluxe, Bajaj Platina 100, TVS Sport. Read in Tamil
Story first published: Wednesday, March 31, 2021, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X