அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இத்தாலியன் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான அப்ரில்லாவின் சமீபத்திய புதிய ஸ்கூட்டர்கள் தென்னிந்தியாவில் 100க்கும் மேற்பட்ட மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இந்தியாவில் இந்த இத்தாலி பிராண்டின் ஸ்கூட்டர்களை பியாஜியோ க்ரூப் விற்பனை செய்து வருவது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். இந்திய சந்தையில் பியாஜியோ க்ரூப்பின் கிட்டத்தட்ட 45 சதவீத இருசக்கர வாகனங்களின் விற்பனை தென்னிந்தியாவில் இருந்து கிடைப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இதனால் தான் தைரியமாக தென்னிந்தியாவில் 100க்கும் அதிகமான மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களில் புதிய அப்ரில்லா ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இந்த நிறுவனம் தயாராகி வருகிறது. இதுகுறித்து பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் வணிகத்தின் முதன்மை அதிகாரி சுதன்ஷு அகர்வால் கருத்து தெரிவிக்கையில், "இந்தியாவின் தென்பகுதியில் இருந்து எங்கள் தயாரிப்புகளுக்கு வலுவான தேவை இருப்பதை கண்டோம்.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

புவியியல் ரீதியாக, இது எங்கள் இருசக்கர வாகன வணிகத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக உள்ளது. ஏனெனில் இந்தியாவில் எங்களின் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் கிட்டத்தட்ட 45 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை தென்னிந்தியாவில் இருந்தே கிடைக்கின்றன" என்றார்.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

பியாஜியோ க்ரூப் சமீபத்தில் தான் அப்ரில்லா எஸ்ஆர்125 மற்றும் எஸ்ஆர்160 ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அப்டேட் செய்திருந்தது. இவை இரண்டும் தான் அந்த 100க்கும் அதிகமான மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் புதிய அப்ரில்லா எஸ்ஆர்125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.08 லட்சமாகவும், எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் விலை ரூ.1.18 லட்சமாகவும் உள்ளன.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இவற்றை பியாஜியோ க்ரூப்பின் இ-வணிக இணைய பக்கத்தில் ரூ.5,000 என்கிற முன் தொகையுடன் முன்பதிவு செய்யலாம். தோற்றத்தில் இவை இரண்டிற்கும் இடையே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் 160சிசி, பிஎஸ்6 3-வால்வு தொழிற்நுட்பத்தை கொண்ட என்ஜினும், எஸ்ஆர்125 ஸ்கூட்டரில் 125சிசி என்ஜினும் வழங்கப்படுகிறது.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இந்த திருத்தியமைக்கப்பட்ட அப்ரில்லா எஸ்ஆர் ஸ்கூட்டர்கள் அவற்றின் முந்தைய தலைமுறையில் இருந்து ஏகப்பட்ட காஸ்மெட்டிக் அப்கிரேட்களையும், தொழிற்நுட்ப அப்கிரேட்களையும் பெற்று வந்துள்ளன. இதில் குறிப்பாக தொழிற்நுட்ப அப்கிரேட்களினால் இந்த அப்ரில்லா ஸ்கூட்டர்களே தற்போதைக்கு வேகமான 125சிசி & 160சிசி ஸ்கூட்டர்களாக விளங்குகின்றன.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

ஸ்டைலிங் மாற்றங்களை பொறுத்தவரையில், புதிய V-வடிவிலான எல்இடி ஹெட்லைட்களுடன் ரீடிசைனில் முன்பக்கத்தை இவை பெற்று வந்துள்ளன. அதேபோல் இவற்றில் ஹேண்டில்பாரை மூடும் கௌல் பேனலின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மற்ற டிசைன் மாற்றங்களாக பிளவுப்பட்ட வடிவில் இருக்கை அமைப்பு, புதிய க்ராப் ரெயில்கள் மற்றும் முழு எல்இடி விளக்கு அமைப்பு உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இந்த புதிய அப்ரில்லா எஸ்ஆர் வரிசை ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ள புதிய எல்சிடி திரையின் மூலம் டச்சோமீட்டர், வாகனத்தின் அதிகப்பட்ச வேகம், சராசரி வேகம், தற்போதைய வேகம், ஒட்டுமொத்த மைலேஜ், எரிபொருளின் அளவு, இரட்டை பயண மீட்டர்கள், ஓடோமீட்டர், என்ஜின் ஆயிலின் வெப்பநிலை, ஏபிஎஸ் இண்டிகேட்டர் மற்றும் உடனடி மைலேஜ் உள்ளிட்டவற்றை அறியலாம்.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் 3-வால்வு, ஃப்யுல் இன்ஜெக்டட், சிங்கிள்-சிலிண்டர் 160.03சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 7,600 ஆர்பிஎம்-இல் 10.84 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 11.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. எஸ்ஆர்125 ஸ்கூட்டரின் 124.45சிசி என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 7,700 ஆர்பிஎம்-இல் 9.78 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 9.7 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

இவை இரண்டிலும் என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டேங்க் இவை இரண்டிலும் வேறுப்படுகின்றன. அதாவது எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் 7-லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கும், எஸ்ஆர்125 ஸ்கூட்டரில் 6-லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கும் வழங்கப்படுகிறது.

அப்ரில்லா ஸ்கூட்டர்கள் இனி நம்மூரில் ஈஸியாக கிடைக்கும்!! தென்னிந்தியாவில் புதியதாக 100 ஷோரூம்கள் அறிமுகம்!

மொத்த 2-வீலர்ஸ் விற்பனையில் கிட்டத்தட்ட பாதி நமது தென்னிந்தியாவில் இருந்து கிடைப்பதால், பியாஜியோ க்ரூப் 100க்கும் அதிகமான மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களில் அப்ரில்லா ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதில் எந்தவொரு ஆச்சிரியமும் இல்லை. மோட்டோப்ளெக்ஸ் என்பது மல்டி-பிராண்ட் ஷோரூம் ஆகும். அதாவது இதில் அப்ரில்லா மட்டுமின்றி, மற்ற பிராண்ட்களின் தயாரிப்பு வாகனங்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Piaggio Aprilia scooters to be available at over 100 Motoplex stores in south India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X