அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

இந்திய சந்தையில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மேக்ஸி ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மேலும் ஒரு மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு அப்ரில்லா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 எனும் அந்த மேக்ஸி ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு வருவதற்கு முன்னதாக, இந்த மேக்ஸி ஸ்கூட்டருக்கு அப்ரில்லா நிறுவனம் தற்போது முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளது. அப்ரில்லா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் ஸ்ட்ரோம் 125, எஸ்ஆர் 125, எஸ்ஆர் 160 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

இந்த வரிசையில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 விரைவில் இணையவுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள வசதிகள் மற்றும் இன்ஜின் குறித்த விபரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளன. இது அப்ரில்லா நிறுவனத்தின் இரண்டாவது மேக்ஸி ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்கள் 5 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மற்றும் அப்ரில்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவு நடைபெற்று வருகிறது. வரும் வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் பணிகள் மஹாராஷ்டிரா மாநிலம் பாரமதியில் உள்ள ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முயற்சிக்கும்போது, இந்த மேக்ஸி ஸ்கூட்டருக்கான விலை குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி புனேவில் இந்த ஸ்கூட்டரின் விலை 1.15 லட்ச ரூபாய் எனவும், டெல்லியில் இந்த ஸ்கூட்டரின் விலை 1.16 லட்ச ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

தற்போதைய நிலையில் அப்ரில்லா நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள சில வசதிகள் எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

மேலும் க்ளவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் இருக்கைக்கு அடியில் போதுமான இடவசதி ஆகியவையும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் ஹைலைட்களாக இருக்கும். அத்துடன் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரில், 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் எரிபொருள் டேங்க்கும் இதே கொள்ளளவு கொண்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 மேக்ஸி ஸ்கூட்டரில், 125 சிசி, 3 வால்வு, சிங்கிள் சிலிண்டர், ஃப்யூயல் இன்ஜெக்டட், ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,600 ஆர்பிஎம்மில் 9.3 ஹெச்பி பவரையும், 6,250 ஆர்பிஎம்மில் 9.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த மேக்ஸி ஸ்கூட்டர் தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia SXR 125 Maxi Scooter Price Revealed On Official Website - Here Are The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X