அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

சமீபத்திய அறிமுகமான அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை விவரிக்கும் வீடியோ முதல்முறையாக வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எஸ்.எக்ஸ்.ஆர்160 ஸ்கூட்டரை அப்ரில்லா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மற்றொரு மேக்ஸி-ஸ்கூட்டராக அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 வெளிவந்துள்ளது.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

இந்த புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ரூ.5,000 என்ற முன் தொகையுடன் அப்ரில்லாவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும், அங்கிகரீக்கப்பட்ட பியாஜியோ டீலர்ஷிப் மையங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

இந்திய சந்தைக்கென இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட முதல் அப்ரில்லா ஸ்கூட்டர் இந்த மேக்ஸி-ஸ்கூட்டராகும். இதன் தயாரிப்பு பணிகள் மஹாராஷ்டிராவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

எஸ்.எக்ஸ்.ஆர்160 ஸ்கூட்டரின் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டரும் அதே டிசைன் தத்துவத்தை தான் பின்பற்றியுள்ளதை ஜெட் வீல்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரிய வரும்.

இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் எல்இடி விளக்குகள் & டிஆர்எல்களுடன் மூன்று துண்டுகளாக ஹெட்லேம்ப்கள் உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் ப்ளூடூத் இணைப்புடன் உள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் உள்ள பெரிய திரையின் மூலம் ஒட்டுனர் தேவையான தகவல்களை பெற முடியும்.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

இவற்றுடன் எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் துளை, பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் நன்கு அகலமாக முன்பக்கத்தில் மற்றும் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்கும் பகுதியை அப்ரில்லா வழங்கியுள்ளது.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

ப்ரீமியம் தோற்றத்திற்காக ஸ்கூட்டரை சுற்றிலும் அருமையான பாடி கிராஃபிக்ஸும், அதிகளவில் க்ரோம் தொடுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டரில் ஒரே துண்டாக இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் 1,985மிமீ நீளமுடையது, 1,261மிமீ உயரமுடையது, மற்றும் 806மிமீ அகலமுடையது. 7 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரை மேட் ப்ளாக், பளபளப்பான வெள்ளை, பளபளப்பான சிவப்பு மற்றும் மேட் ப்ளூ என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் பெறலாம்.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டரில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர், 3 வால்வு, ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,600 ஆர்பிஎம்-இல் 9.4 எச்பி மற்றும் 6,520 ஆர்பிஎம்-இல் 8.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

சஸ்பென்ஷனுக்கு வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் & மோனோஷாக்கும், ப்ரேக்கிற்கு சிபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகளும் உள்ளன. இதன் 12 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்125 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு அழகானது? இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

இந்த புதிய அப்ரில்லா ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை. இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் விலையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இணைய பக்கத்தில் ரூ.1.15 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia SXR 125 Scooter First Look Walkaround Video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X