நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரி பணிகள் நமது கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களிலும் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருச்சி நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

தமிழ்நாட்டிற்கான இந்த இரு ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.60 லட்சம் மற்றும் ரூ.1.41 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த டெலிவிரி பணிகளுக்காக கோயம்புத்தூரில் ராம்நகரில் உள்ள ராஜ்துரையின் இ-வைகல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் ஏத்தர் நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

அதேபோன்று திருச்சியில் அண்ணாமலை நகரில் உள்ள வேலா ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடனும் ஏத்தர் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த இரு நகரங்களிலும் விரைவில் மேற்கூறப்பட்ட ஏத்தர் 450 ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

இந்த இரு நகரங்களின் மூலம் தமிழகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் நகரங்களின் எண்ணிக்கை மூன்றாகியுள்ளது. ஏத்தர் ஸ்கூட்டரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ரைட்கள் கொடுக்கப்படவுள்ளன.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் இன்னும் சில வாரங்களில் ஏத்தர் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுவிடும். தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் & டெலிவிரிகளை துவங்குவதுடன் விரைவு-சார்ஜிங் நிலையங்களையும் இந்த இரு நகரங்களில் உருவாக்க ஏத்தர் தயாராகி வருகிறது.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

இதற்காகவே ஏற்கனவே கோவையில் 5 விரைவு-சார்ஜிங் மையங்களையும் திருத்தியில் 2 மையங்களையும் உருவாக்கும் பணிகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இறங்கிவிட்டது. அதிகளவில் விரைவு-சார்ஜிங் நிலையங்களை அமைத்துவிட்டால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் பற்றிய கவலை ஏத்தர் நிறுவனத்திற்கு இருக்காது.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

இந்தியாவில் கிட்டத்தட்ட 18 நகரங்களில் ஏத்தரின் 120 பொது விரைவு-சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஏத்தரின் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 85கிமீ என்றளவில் உள்ளது.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து கொண்டு அதிகப்பட்சமாக 85கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும். இந்த வகையில் பார்த்தோமேயானால், இதன் பேட்டரி சார்ஜ் செய்யப்படும் ஒவ்வொரு நிமிடமும் ஸ்கூட்டருக்கு 1.45 கிமீ தூரம் வரையில் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் 2.61kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் மணிக்கு 40கிமீ என்ற வேகத்தை 3.3 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். அதுவே 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 70கிமீ ஆக உள்ளது.

நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின

இதன் 2.4kWh பேட்டரி தொகுப்பு சார்ஜ் ஆகும் ஒவ்வொரு நிமிடமும் ஸ்கூட்டருக்கு 1 கிமீ தூரம் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இது 40kmph வேகத்தை எட்ட குறைந்தப்பட்சம் 3.9 வினாடிகள் தேவைப்படும். 450 எக்ஸ் ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்புடன் தொடுத்திரை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather
English summary
Ather Energy, India’s first intelligent electric scooter manufacturer has begun delivery and test-rides of Ather 450X at Ramnagar, Coimbatore, in association with Rajdurai's E-Vehicles Pvt Ltd, a leading 2-wheeler service company. In Trichy, the delivery and test-rides have begun at Annamalai Nagar, in association with Vela Automobiles Pvt Ltd, Trichy’s leading automotive retailer. Ather Energy already has its footprints in Chennai and now with entry in Coimbatore and Trichy, Ather is taking the count to 3 cities in the state of Tamil Nadu.
Story first published: Tuesday, April 20, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X