டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டர் ஹீரோ மோட்டோகார்ப்பின் சிஇஒ பவன் முஞ்சல் அவர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஏத்தர் எனர்ஜி பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

இந்த இவி தயாரிப்பு நிறுவனத்திற்கு முதன்மை முதலீட்டாளர்களுள் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. ஏத்தர் என்ர்ஜியின் வளர்ச்சிக்கு கடந்த 2016ல் இருந்து ஹீரோ நிறுவனம் ஒரு பகுதியாக உதவி வருகிறது.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

மேலும், இந்த பெங்களூர் இவி நிறுவனத்தில் 35 சதவீத பங்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டுள்ளது. இதில் இருந்து ஏத்தர் என்ர்ஜி நிறுவனத்தின் செயல்பாட்டில் ஹீரோ நிறுவனத்தின் பங்கு எந்த அளவில் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

இதனால் தான் என்னவோ, இந்தியா முழுவதும் வேகமாக பிரபலமாகி வரும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் மாதிரி ஹீரோ நிறுவனத்தின் சிஇஒ-வும் தலைவருமான டாக்டர்.பவன் முஞ்சலுக்கு டெல்லியில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

இந்த சிறப்புமிக்க முதல் 450எக்ஸ் ஸ்கூட்டரை பவன் முஞ்சலுக்கு ஏத்தர் எனர்ஜியின் சிஇஒ-வும் துணை நிறுவனருமான தருண் மெஹ்தா வழங்கியுள்ளார். அப்போது பேசிய தருண், கடந்த சில மாதங்களாக ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை நாட்டின் பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்தி வருகிறோம்.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

இந்த வகையில் தற்போது புதுடெல்லியில் சில்லறை வணிகத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதிலும் டெல்லியில் முதல் வாகனம் டாக்டர்.பவன் முஞ்சலுக்கு வழங்குவதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைகிறோம்.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

டாக்டர்.பவன் முஞ்சல் எங்கள் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவராக ஏத்தர் மீது நம்பிக்கை வைத்து வளர்த்தது மட்டுமில்லாமல், அவர் எனக்கும் ஸ்வப்னிலுக்கும் தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்து வருகிறார். இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம் என கூறினார்.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்பின் சிஇஒ பவன் முஞ்சல் கருத்து தெரிவிக்கையில், தருணிடம் இருந்து ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஹீரோ மோட்டோகார்பின் ‘இயக்கத்தின் எதிர்காலமாக இருங்கள்' என்ற பார்வையில் நிலையான நோக்கமும், தூய்மையான ஆற்றலும் உள்ளது.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

நாட்டின் வாடிக்கையாளர்களுக்காக இந்த தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் இணைப்பு வாகனத்தை உருவாக்கிய தருண், ஸ்வப்னில் மற்றும் முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என கூறினார்.

டெல்லியில் முதல் ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை டெலிவிரி எடுத்த பிரபலம்!! யார்னு தெரியுமா?

சென்னையில் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சமாக உள்ளது. இதில் பொருத்தப்படும் 2.9kWh லித்தியம்-இரும்பு பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்ப 5.45 மணிநேரங்கள் தேவைப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather
English summary
Mr. Tarun Mehta, Co-founder and CEO of Ather Energy, presented the first unit of their new electric scooter 450X in Delhi to Dr. Pawan Munjal, the Chairman and CEO, Hero MotoCorp.
Story first published: Thursday, April 1, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X