சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடாவை அடுத்து அதிரடி!!

யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில் பஜாஜ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட அனைத்து கெடுபிடிகளையும் தளர்த்தும் பணியில் உலக நாடுகள் சில ஈடுபட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவிலோ மீண்டும் கெடுபிடிகள் கடுமையாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

அண்மைக் காலமாக இந்தியாவை கொரோனா வைரஸ் இரண்டாம் அலை புரட்டி போட்டு எடுத்து வருகின்றது. குறிப்பாக, ஆம்புலன்ஸ், படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நாட்டையே உலுக்கி எடுத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலைகளின் காரணமாக மாநிலங்கள் சில தன்னிச்சையாக முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

இதனால், மக்கள் வெளியில் வழக்கம்போல் வெளியில் வருவதை தடைப்பட்டுள்ளது. இந்த நிலையை உணர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தனது அனைத்து பிராண்ட் வாகனங்களின் வாரண்டி மற்றும் சர்வீஸ் கால அவகாசத்தையும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த பிராண்ட் வாகனங்கள் மட்டுமின்றி கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும் விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. ஆகையால், இந்த கால அவகாச நீட்டிப்பு கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மே 31ம் தேதி வரை இருக்கும் வாரண்டி மற்றும் ஃப்ரீ சர்வீஸ் கால அவகாசத்தை வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், இடைப்பட்ட காலத்தில் கால அவகாச முடிவை சந்திக்க இருந்த வாடிக்கையாளர்கள் தற்போது பூரிப்படையத் தொடங்கியுள்ளனர்.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

பஜாஜ் நிறுவனம், கொரோனாவால் நாடு சந்தித்து வரும் இன்னலான சூழ்நிலையைக் குறைக்கும் பொருட்டும் சில சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில், அண்மையில் 250 பெட்களை தயாராக வைத்திருப்பதாக அது அறிவித்தது.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த படுக்கைகள் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதுதவிர தனது நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் பல்வேறு திட்டங்களை இந்த இக்கட்டான காலத்தில் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு வெளியிட்ட பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல... ஹோண்டா, டாடா மோட்டார்ஸை அடுத்து அதிரடி!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் பல்சர் 250எக்ஸ் எனும் புதிய மாடலைக் களமிறக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய சாலையில் இப்புதிய பைக் பலபரீட்சையில் ஈடுபடுவதுபோன்ற படங்கள் வெளியாகி வருகின்றன. இதுமட்டுமின்றி இன்னும் சில புதிய மாடல்களையும் நாட்டில் களமிறக்கும் பணியில் பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Auto Announces Its Extends Warranty And Service Period In India. Read In Tamil.
Story first published: Wednesday, May 19, 2021, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X