டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான மோட்டார்சைக்கிள்களாக விளங்கும் அதன் என்எஸ், ஆர்எஸ் மற்றும் அவென்ஞ்சர் பைக்குகளின் விலைகளை சில ஆயிரங்கள் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ள விலை அதிகரிப்பு நடவடிக்கையில் அதன் என்எஸ்160, என்எஸ்200, ஆர்எஸ்200, அவென்ஞ்சர் ஸ்ட்ரீட் 160 மற்றும் அவென்ஞ்சர் க்ரூஸ் 220 மாடல்கள் அடங்குகின்றன.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

இவற்றின் விலைகள் ரூ.2,000-இல் இருந்து ரூ.5,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை அதிகரிப்பிற்கு பிறகு 200சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் இளம் தலைமுறையினரின் முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் பல்சர் என்எஸ்200-இன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

இது இதன் முந்தைய விலையை காட்டிலும் ரூ.4,000 அதிகமாகும். இதேபோல் ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ள பல்சர் ஆர்எஸ்200 மற்றும் அவென்ஞ்சர் க்ரூஸ் 220 மோட்டார்சைக்கிள்களின் புதிய விலைகள் ரூ.1.62 லட்சம் மற்றும் ரூ.1.26 லட்சம் என கொண்டுவரப்பட்டுள்ளன.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

பஜாஜின் 160சிசி மோட்டார்சைக்கிள்களான என்எஸ்160 மற்றும் இந்தியாவின் மலிவான க்ரூஸர் பைக் அவென்ஞ்சர் ஸ்ட்ரீட் 160 பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இனி முறையே ரூ.1.14 லட்சம் மற்றும் ரூ.1.08 லட்சமாகும். மற்றப்படி சமீபத்திய அறிமுகமான என்எஸ்125 பைக்கின் விலையில் தயாரிப்பு நிறுவனம் கை வைக்கவில்லை.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

பல்சர் என்எஸ்125 மோட்டார்சைக்கிளின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.98,234 ஆக உள்ளது.பல்சர் 125 பைக்குடன் ஒப்பிடுகையில் என்எஸ்125 பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.15,000-இல் இருந்து ரூ.20,000 வரையில் அதிகமாக உள்ளது.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

ஆனால் கேடிஎம் ட்யூக் 125-இன் விலையை காட்டிலும் இந்த 125சிசி என்எஸ் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் அளவில் குறைவாகும். ட்யூக் 125 பைக்கின் விலையை சமீபத்தில் தான் கேடிஎம் நிறுவனம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

இந்த விலை அதிகரிப்பினால் பஜாஜின் ஒரே ஒரு பேனல்களால்-நிரப்பப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளான ஆர்எஸ்200-இன் விலை, டோமினார் 250-ஐ காட்டிலும் அதிகரித்துள்ளது. என்எஸ்125 பைக்கிற்கு முன்னதாக பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த டோமினார் 250 பைக்கின் விலை சமீபத்தில் தான் ரூ.15,000 வரையில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

அதிகரித்துவரும் உலோக பாகங்களின் விலைகளுக்கும் மத்தியில் இத்தகைய விலை குறைப்பை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கொண்டுவருவதாக நமது செய்திதளத்தில் கூறியிருந்தோம். ஆனால் அதற்கடுத்த நாளே இவ்வாறான விலை அதிகரிப்பு அறிவிப்பை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டோமினார் 250-இன் விலையை குறைப்பதுபோல் குறைத்து, என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!!

அலுமினியம், இரும்பு உள்ளிட்டவற்றின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஜாஜ் ஆட்டோ மட்டுமின்றி இந்தியாவின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன.

Most Read Articles

English summary
Bajaj announces a price hike on some of the motorcycles sold in India. This includes the NS160, NS200, RS200, Avenger Street 160 and the Avenger Cruise 220 models. The price hike ranges between Rs 2,000 and Rs 5,000.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X