அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

இந்தியாவின் எந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன?, என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

இந்தியாவின் எந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதிகம் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்திருக்கின்றது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையின்படி இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவே நாட்டின் அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன சந்தையை மிரள வைக்கும் அமைந்துள்ளது.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

பஜாஜ், 2021 ஏப்ரலில் ஒட்டுமொத்தமாக 3,48,173 யூனிட்டு வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது உள் மற்றும் வெளிநாடுகளில் விற்பனைச் செய்த வாகனங்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் வெளிநாடுகளுக்கு மட்டும் 2,21,603 யூனிட்டுகளை நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றன.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

இதனால், இந்தியாவின் அதிகம் ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக பஜாஜ் மாறியிருக்கின்றது. மேலும், 2021-2022 நிதியாண்டின் மிக சிறந்த ஆரம்பமாக இது கருதப்படுகின்றது. மேலும், கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இது 60 சதவீதம் அதிகம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

பஜாஜ் நிறுவனம் 79க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் பல்சர் மற்றும் டோமினார் பைக்குகளுக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறிப்பாக, பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளுக்கு சிறந்த டிமாண்ட்.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

எனவேதான் பல்சர் வரிசையில் புதிய புதிய வெர்ஷன்களை நிறுவனம் அவ்வப்போது அப்கிரேட் செய்த வண்ணம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி தனது உற்பத்தி திறனையும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

அந்தவகையில், மிக சமீபத்தில் தனது நான்காவது உற்பத்தி ஆலையை மஹாராஷ்டிராவின் சக்கன் பகுதியில் அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 650 கோடியை நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இங்கு, பிரீமியம் தர ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளைக் கட்டமைக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

அதிகம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் எது தெரியுமா? வேற லெவல் விற்பனை!!

உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் மூன்றாம் இடத்தை வகித்து வருகின்றது, பஜாஜ். இந்த இடத்தை முதல் இடமாக மாற்றும் நோக்கிலேயே பஜாஜ் மிக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Bajaj Auto Registered 3,48,173 Units Sales Figure WorldWide Last Month. Read In Tamil.
Story first published: Monday, May 3, 2021, 19:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X