என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சந்தையில் புதியதாக விற்பனைக்கு கொண்டுவரவுள்ள மோட்டார்சைக்கிளை பற்றிய டீசர் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படத்தில் பைக் ஒன்று புகையினால் மறைக்கப்பட்டுள்ளது போல் காட்டப்பட்டுள்ளது. புகையின் மீது, ‘புதிய ஸ்ட்ரீட் மெஷின் என்ன என்பதை உங்களால் கண்டுப்பிடிக்க முடிகிறதா?' என்ற கேள்வி பதிவிடப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

இந்திய முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ, புதிய மோட்டார்சைக்கிளை அதன் பிரபலமான, ஸ்போர்டியான தோற்றத்தை கொண்ட பல்சர் வரிசையில் கொண்டுவரவே திட்டமிட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

இருப்பினும் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளிவராததால், இது என்ன பைக் என்பதை நீங்களே கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம் என பஜாஜ் நிறுவனம் தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. புகையால் மோட்டார்சைக்கிள் மறைக்கப்பட்டு இருப்பினும், இந்த புதிய பஜாஜ் பைக்கை ஓரளவிற்கு நம்மால் பார்க்க முடிகிறது.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

குறிப்பாக கருப்பு நிற சக்கரங்களும், என்ஜினிற்கு அடிப்பகுதியில் வழங்கப்படும் பாதுகாப்பானும் நமது கண்களுக்கு தெரிகின்றன. கருப்பு நிற சக்கரத்தில் வெள்ளை நிற ரிம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்றதான சக்கரங்களையே கடந்த மாதங்களில் சோதனை செய்யப்பட்ட பல்சர் என்எஸ்250 பைக்கில் பார்த்திருந்தோம்.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

இந்த என்ஜின் பாதுகாப்பானிலும் வெள்ளை நிறத்தை பார்க்க முடிகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து கடைசியாக என்எஸ்125 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகமானது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.93,690 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

கிட்டத்தட்ட பல்சர் 125-இன் என்ஜின் ஆற்றலை பெற்றுவந்துள்ள இந்த புதிய என்எஸ் மோட்டார்சைக்கிள் பெரும்பான்மையான உடற்பாகங்களை என்எஸ்160 மற்றும் என்எஸ்200 பைக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால் பல்சர் வரிசையில் ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்கள் புதியவைகளாகவே உள்ளன.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

எனவே 250சிசி-யில் பல்சர் பைக்கை கொண்டுவரவே பஜாஜ் நிறுவனம் திட்டமிடும். நமக்கு தெரிந்தவரையில், என்எஸ்250 அல்லது பல்சர் 250எஃப் பைக்கின் டீசர் படமாக இது இருக்கலாம். ஏனெனில் இவை இரண்டும் தான் சமீப காலமாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

மற்றப்படி ஆர்எஸ்200 போன்ற ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாக இது இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் அத்தகைய மோட்டார்சைக்கிள் எதையும் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் சோதனை செய்யவில்லை, அதுமட்டுமில்லாமல் நாக்டு என்எஸ் மோட்டார்சைக்கிள்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ஆர்எஸ்200 பைக்கிற்கு கிடைப்பதில்லை.

என்னங்க சொல்றீங்க, பல்சர் என்எஸ்250 மோட்டார்சைக்கிளா!! போடு செம்ம, டீசர் படத்தை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ!

புதிய தலைமுறை பல்சர் பைக்குகளின் வடிவமைப்பு பணிகளில் பஜாஜ் நிறுவனம் கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஈடுப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த புதிய பல்சர் பைக்கின் அறிமுகத்தை பற்றி ஆலோசிப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லை என்றே தோன்றுகிறது.

Most Read Articles

English summary
Bajaj Teases ‘Newest Street Machine’; Could It Be The NS 250?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X